கார்த்திகாவுக்கு இது நிறைமாசம்.. சீமந்தம் இப்பதான் முடிந்தது.. இன்று விடிகாலையில் ஒரே அலறல்.. கொடுமை
மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உட்பட 2 பேர் பலியானார்கள்
தூத்துக்குடி: கடந்த வாரம்தான் கார்த்திகாவுக்கு சீமந்தம் நடந்த நிலையில், இப்போது மிகப்பெரிய துயரம் நடந்துள்ளது.. விடிகாலையில் 2 உயிர்களும் பறிபோயுள்ளது..!
தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி கார்த்திகா, தாய் காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் 3வது பகுதியில் வசித்து வருபவர் முத்துராமன்.. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள்..

கார்த்திகா
இவர்களுக்கு கார்த்திகா என்ற மகள் இருக்கிறார்.. இந்த பெண்ணை விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு சமீபத்தில்தான் திருமணம் செய்து தந்துள்ளனர்.. மாப்பிள்ளை எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கார்த்திகா தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கிறார்.. கடந்த வாரம் கார்த்திகாவுக்கு வளைகாப்பு சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டுள்ளது... அதற்கு பிறகு பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்..

தாழ்ப்பாள்
நேற்று இரவு வழக்கம்போல் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்கள்.. முத்துராமலிங்கத்தின் அம்மா காத்தம்மாள் (75) வீட்டில் வெளிப்பகுதியில் உள்ள முன் பகுதியில் தூங்கி உள்ளார்... மற்றவர்கள் வீட்டை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, நடுவீட்டிற்குள்ளேயே படுத்து தூங்கி உள்ளனர்.. இன்று அதிகாலை 4 மணி இருக்கும்.. அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து தொப்பென்று விழுந்துள்ளது..

அலறல்
அந்த நேரம், காத்தம்மாள் சிறுநீர் கழிக்க எழுந்தபோது, வீட்டிற்குள்ளிருந்து முத்துராமலிங்கத்தின் அலறல் சத்தம் கேட்டது.. இதைக்கேட்ட காத்தம்மாள், ஓடிச்சென்று கதவை திறக்க முயன்றார்.. ஆனால், கதவை திறக்க முடியவில்லை.. இதனால், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் கதவை தட்டி காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று அலறினார்.. பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டின் கதவை உடைத்து கொண்டு பார்த்தபோது, மேற்கூரை மொத்தமாக இடிந்து விழுந்து கிடப்பதை கண்டனர்..

போஸ்ட் மார்ட்டம்
அதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை மீட்டனர். ஆனால், அவருக்கு பக்கத்திலேயே காளியம்மாளும், கார்த்திகாவும் உடல் நசுங்கி இறந்துகிடந்தனர்.. இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி விட்டதால், அவர்களை மீட்கவே முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து இருவரின் சடலத்தையும் மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பழைய வீடு
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.. அந்த வீடு ரொம்ப பழைய வீடாம்.. கிட்டத்தட்ட 50 வருட காலமாகிறது.. கான்கிரீட் வீட்டின் மேற்கூரை பகுதியில் பழைய ஓடுகளை அடைத்து திணித்து வைத்திருந்திருக்கிறார்கள்.. அந்த ஓடுகள் கடந்த சில நாட்களாகவே ஈரமாகவே இருந்திருக்கிறது.. அதனால், எடை தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.. மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications