தூத்துக்குடியில் ஜனநாயகன் டிரெய்லர் ரிலீஸ்! ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததும் அஜிதா செய்த செயல்!
தூத்துக்குடி: "ஜனநாயகன்" படத்தின் டிரெய்லர் வெளியீட்டையொட்டி தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் என்ன செய்தார் என்பதை பாருங்கள். தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா ஆக்னல். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து நிறைய நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.

பின்னர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியதும் அதிலும் உறுப்பினராக சேர்ந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தின் போதும் சரி மக்களுக்கு ஒரு பிரச்சினை என வந்த போதும் சரி ஓடிச் சென்று உதவினார்.
மக்களின் பிரச்சினைகளை அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்து அதற்கு உரிய தீர்வுகளையும் கண்டார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு விஜய் ஆட்களை நியமித்து வந்தார்.
அப்போது தன்னை விட்டுவிட்டு கட்சியில் புதிதாக சேர்ந்த சாமுவேலுக்கு பதவி கொடுப்பதை எதிர்த்து பனையூர் தவெக அலுவலகத்திற்கு வந்து விஜய்யின் காரை மறித்து நியாயம் கேட்டார். ஆனால் அவரை பவுன்சர்கள் அந்த இடத்தை விட்டு அகற்றிய நிலையில் விஜய் என்னவென்று கூட கேட்காமல் வேகமாக உள்ளே சென்றுவிட்டார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சாமுவேல் நியமிக்கப்பட்டதை அடுத்து அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் நிர்வாகிகள் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மன குமுறல்களுடன் தூத்துக்குடிக்கு வந்த அஜிதா ஆக்னல் திடீரென 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்ற அஜிதா, உடல்நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் அசவுகரியம் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் அவர் கடந்த 30-ஆம் தேதி முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
அவரை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டதற்கு காரணம் பதவி கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்தது என்றும் அஜிதாவை கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடுமையாக பேசிவிட்டது என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. நிறைய தியேட்டர்களில் இந்த டிரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்ட மோடிற்கு சென்றனர்.
அந்த வகையில் அஜிதாவும் தூத்துக்குடியில் ஜனநாயகன் டிரெய்லர் ரிலீஸை கேக் வெட்டி கொண்டாடினார். ஆதரவாளர்களுக்கு கேக் ஊட்டினார். பின்னர் அங்குள்ள ஒரு தியேட்டரில் அவர் ஆதரவாளர்களுடன் டிரெய்லரை பார்த்து கொண்டாடினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் நிகழ்ச்சியாக அஜிதா டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications