பீரோவை திறந்து பார்த்ததும் வெலவெலத்து போன பெண்.. தூத்துக்குடியை அதிர வைத்த "குட்டி".. என்ன நடந்தது?
தூத்துக்குடி: தூத்துக்குடி சீனிவாச நகரில் நடந்த சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சீனிவாச நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவரது மனைவி ஆனந்தவல்லி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மாமனார், மாமியாருடன் வாடகை வசித்து வந்த ஆனந்தவல்லி.. பணத்திற்கு கஷ்டப்பட்டு இருக்கிறார். தினசரி குடும்பத்தை நடத்தவே காசு இன்றி கஷ்டப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை கவனித்துக்கொள்வதற்காக, சீனிவாச நகர் பகுதியை சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம் ஆனந்தவல்லி கடன் வாங்கியுள்ளார்.
முதலில் பணத்திற்கு வட்டியை ஆனந்தவல்லி முறையாக கட்டி இருக்கிறார். ஆனால் போக போக கையில் காசு இல்லை. இதனால் வட்டி மேல் வட்டி சேர்ந்து, கடனையும் கொடுக்காமல் திணறி இருக்கிறார் ஆனந்தவல்லி.
பணத்தை தொடர்ந்து ஆனந்தவல்லியிடம் குட்டி கேட்டு வந்த நிலையில் திடீரென ஆனந்தவல்லி வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளார். கையில் காசு இல்லாததால்.. அதை கொடுக்க முடியாமல், வேறு இடத்திற்கு சென்று ஆனந்தவல்லி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனந்தவல்லிக்கு அவ்வப்போது போன செய்த குட்டி கடுமையான வார்த்தைகளில் ஆனந்தவல்லியை மிரட்டி இருக்கிறார். காசு வரலைனா அப்பறம் நடக்குறதே வேறு என்று கடுமையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆனந்தவல்லியின் வீட்டில் மாமனார் மாமியாரை வசித்து வருவதை அறிந்த குட்டி ஆனந்தவல்லி வீட்டுக்கு சென்று மாமனார் மாமியாரை வெளியேற்றி வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை எடுத்து சென்றுள்ளார்.
பின்னர் ஆனந்தவல்லி தகவல் அறிந்து பதட்டத்தோடு வீட்டுற்கு சென்று உள்ளார். வீட்டுக்கு சென்று வேறு சாவியை வைத்து கதவை திறந்து உள்ளார். உள்ளே பீரோவை திறந்து பார்த்த போது 8 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆனந்தவல்லியை மிரட்டும் வகையில் குட்டி 8 துப்பாக்கி தோட்டாக்களை பீரோவில் வைத்துவிட்டு சென்று இருக்கிறார். காசு கொடுக்கவில்லை என்றால் தோட்டாதான் பதில் என்று சொல்லும் வகையில் குட்டி இப்படி செய்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் துறையினர் 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர். அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனது.
தூத்துக்குடி சீனிவாச நகரில் நடந்த சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications