திருச்செந்தூர் ஆவணித்திருவிழா.. சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி கோலத்தில் முருகனை தரிசிக்க வாங்க
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதியன்று சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுவார். செப்டம்பர் 13 புதன்கிழமை ஆவணி தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் ஆவணி திருவிழா மற்றும் மாசித்திருவிழா என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் மிக முக்கிய திருவிழாக்களாகும்.

இதில் இந்த ஆண்டு ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களை தரிசிக்க நடத்திய மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா. மாசித் திருவிழாவைப்போல ஆவணித் திருவிழாவும் 12 நாட்கள் நடைபெறும்.
தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் முருகனை பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் எனும் பாடலை பகழிக்கூத்தர் எனும் ஆசிரியர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் ஆவணி திருவிழா அட்டவணை 2023:
3 செப்டம்பர், 2023 - ஞாயிறு மாலை: 4.30 மணி - கோயில் யானை மேல் கொடிபாதம் வீதி உலா வருதல்.
4 செப்டம்பர், 2023 - திங்கள் - நாள் 1 - ஆவணி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணி அளவில் ஸ்ரீ அப்பர் சுவாமிகள் தங்க சப்பரம் இரவு 7 மணிக்கு ஸ்ரீ பேவிநாயகர் தந்த பல்லக்கில் அஸ்திர தேவருடன் உலா.
செப்டம்பர் 5ஆம் தேதி காலை: 10.30 மணி - சிங்க கேடய சப்ரம் ; அம்பாள் சிறிய பல்லக்கு இரவு: 7 மணி - சிங்க கேடய சப்ரம் ; அம்பாள் பெரிய கேடய சப்பரம்.
செப்டம்பர் 6 ஆம் தேதியன்று காலை: 7 மணி - பூங்கேடைய சப்பரம் - கேடயம் சப்பரத்தில் அம்பாள் ; இரவு தங்க முத்து கிடா வாகனம் - அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்.
செப்டம்பர் 7 வியாழன் காலை தங்க முத்து கிடா வாகனம்; அம்பாள் வெள்ளி அன்ன வாகனம் இரவு: 6.30 வெள்ளி யானை , அம்பாள் வெள்ளி சரப வாகனம்.
செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை காலை: 7 மணிக்கு வெள்ளி யானை , அம்பாள் வெள்ளி சரப வாகனம் மாலை 4 மணிக்கு மேலக்கோவில் அபிஷேகம், ஆராதனை இரவு: 7.30 மணி - மேலக்கோவில் குடவருவாயில் தீபாராதனை தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
செப்டம்பர் 9 சனிக்கிழமை காலை 7 மணி - கோ ரதம் ; இரவு 8 மணிக்கு வெள்ளி தேர் , அம்பாள் இந்திர விமானம்.
செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை: 4.30 மணிக்கு பிறகு ஸ்ரீ சண்முகர் உருகு சட்ட சேவை. காலை 5.30 மணிக்கு மேல் ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான் பல்லக்கு காலை 8.30 மணி வெட்டி வேர் சப்பரத்தில் ஆறுமுக நயினார் மாலை: 4.30 மணிக்கு பிறகு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்தல்.
செப்டம்பர் 11 திங்கட்கிழமை காலை 5 மணி - பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் ஊர்வலம். காலை 10.30 மணிக்குப் பிறகு - பச்சை சாத்தி சப்பரம் ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான், ஸ்ரீ அலைவாயுகந்தப் பெருமான் வெள்ளி குதிரை வாகனம்.
செப்டம்பர் 12, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு பல்லக்கு இரவு 8 மணிக்கு தங்க கைலாய பர்வதம் , வெள்ளி கமலம் வாகனத்தில் அம்பாள் தேர் கடாக்ஷம்.
செப்டம்பர் 13 புதன்கிழமை ஆவணி தேரோட்டம் இரவு 7 மணிக்கு பெரிய திருப்பல்லக்கு.
செப்டம்பர் 14 வியாழக்கிழமை இரவு 7 மணி புஷ்ப சப்பரம் தெப்பக்குளம் மண்டபம் சேர்தல் அபிஷேகம், அலங்காரம் ஆராதனைக்குப் பிறகு - திருவீதி வலம், மேலைக்கோவில் சேர்த்தல்
செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி மஞ்சள் நீராடல் இரவு 9 மணி மலர் கேடய சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருக்கோவில் சேர்தல்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications