தாசில்தார்கள்.. தமிழ்நாடு முழுக்க மாற்றம் நடக்குது.. தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 17 தாசில்தார்களை நிர்வாக நலன் கருதி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார். வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் இரட்டை அகல ரெயில் பாதை திட்டம் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் கலா, கயத்தார் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி முன்னாள் தாசில்தார் வசந்தமல்லிகா, தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில், திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தாசில்தார்கள் மாவட்டங்களுக்குள்ளேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் இரட்டை அகல ரெயில் பாதை திட்டம் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் கலா, கயத்தார் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி முன்னாள் தாசில்தார் வசந்தமல்லிகா, தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனிதாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அரசு கேபிள் டிவி தனிதாசில்தார் ராஜலட்சுமி, சில்லாநத்தம் சிப்காட் நிலஎடுப்பு தனிதாசில்தாராகவும், நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு அலகு-1 தனிதாசில்தார் பொன்னுலட்சுமி, சாத்தான்குளம் தாசில்தாராகவும், கயத்தார் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் அறிவழகன் என்ற சிவராஜ் ஓட்டப்பிடாரம் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் அந்தோணிஜெபராஜ் திருச்செந்தூர் தாசில்தாராகவும், வெம்பூர் சிப்காட் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் பாலசுப்பிரமணியம், கோவில்பட்டி தாசில்தாராகவும், ஏரல் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் கண்ணன் விளாத்திகுளம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.
இதேபோல் சாத்தான்குளம் தாசில்தார் இசக்கிமுருகேசுவரி தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் ஏரல் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், எட்டயபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், எட்டயபுரம் வெம்பூர் சிப்காட் நிலஎடுப்பு அலகு-2 தனிதாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த் தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நிலஎடுப்பு அலகு-1 தனிதாசில்தாராகவும், சில்லாநத்தம் சிப்காட் நில எடுப்பு தனிதாசில்தார் சுப்புலட்சுமி தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தாராகவும் மாற்றப்படுகிறார்கள்.
மேலும் அல்லிகுளம் சிப்காட் நில எடுப்பு அலகு-7 தனிதாசில்தார் வாமணன், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-4 தனிதாசில்தாராகவும், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் ராணி, தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தாராகவும் மாற்றப்படுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தார் செல்வலட்சுமி தெற்குவீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-2 தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்" இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications