தூத்துக்குடியில் அதிமுக - தமாகாவை ஓடவிடும் திமுக! மீண்டும் கனிமொழிக்கு வெற்றி - தந்தி டிவி ரிசல்ட்
தூத்துக்குடி: தமிழகத்தில் உள்ள முக்கிய லோக்சபா தொகுதியான தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி வெற்றி பெறுவார். இங்கு இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி பெறுவார் எனவும், பாஜக கூட்டணியின் தமாகா வேட்பாளர் 3இடம் பிடிப்பார் எனவும், அவர்கள் பெறும் ஓட்டு சதவீதம் பற்றியும் தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
தூத்துக்குடி தொகுதியை பொறுத்தமட்டில் திமுக சார்பில் கனிமொழி எம்பி போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் சார்பில் ரொவினா ரூத் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இதில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுகவின் கனிமொழி எம்பிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவியின் கருத்து கணிப்பு முடிவு இன்று வெளியான நிலையில் அதில் கனிமொழி எம்பிக்கு சாதகமான அம்சம் இடம் பெற்றுள்ளது. மேலும் கனிமொழி எம்பிக்கு தூத்துக்குடி தொகுதியில் 44 சதவீத ஓட்டு கிடைக்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு 29 சதவீத ஓட்டு கிடைக்கும் எனவும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் விஜயசீலன் 13 சதவீத வாக்குகளை பெறுவார் என தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications