தூத்துக்குடி- வேளாங்கண்ணி .. திருச்செந்தூர்-சென்னை ரயில்.. ரயில்வே மேலாளருக்கு கனிமொழி எம்பி கடிதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்பி கனிமொழி தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு திருச்செந்தூர்- சென்னை இடையே நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக புதிய நேரடி ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் திருச்செந்தூரில் சாமி பார்க்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் திருப்பதி என்று சொல்லும் அளவிற்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. சாமி பார்க்க எப்போது போனாலும் தவமே இருக்க வேண்டும் என்கிற அளவில் பக்தர்கள் கூட்டம் வருகிறது. இதனால் திருச்செந்தூருக்கு தினசரி நேரடி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் தெற்கு ரயில்வே இந்த கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை..

இதனிடையே தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு கனிமொழி எம்பி அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர். குறிப்பாக செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழா மற்றும் மே மாத கோடை விடுமுறையில் அதிகமானோர் செல்கின்றனர். இந்த பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி- வேளாங்கண்ணி இடையே நேரடி வாராந்திர ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி- புதுச்சேரி இடையே எந்த ரயில் வசதியும் இல்லாததால் இந்த ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க முடியும்.
திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு திருச்செந்தூர்- சென்னை இடையே நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டி வழியாக புதிய நேரடி ரயில் இயக்க வேண்டும். திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர், விருதுநகர் - காரைக்குடி, காரைக்குடி- திருச்சி ரயில்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி- திருச்சி இடையே இன்டர்சிட்டி ரயிலாக தினமும் இயக்க வேண்டும்.
தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி பாலருவி விரைவு ரெயிலில் ஏசி பெட்டி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே, 2 பொது பெட்டிகளை குறைத்துவிட்டு ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியையும், ஒரு இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டியையும் உடனடியாக இணைக்க வேண்டும். அனைத்து ரயில்களுக்கும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும். திருச்செந்தூர் ரயில் நிலையத்தை பயணிகள் தேவைக்கு ஏற்ப மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கனிமொழி எம்.பி கூறியிருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications