கண்ணீர் விட்டு அழுத வாய்பேச முடியாத மூதாட்டி! கொஞ்சம் பணம், நிறைய அக்கறை! கரம் கொடுத்த கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களை கனிமொழி எம்.பி. சந்தித்த போது, வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் தனது மகனின் நிலையை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார்.

இதனால் திகைத்துப் போன கனிமொழி, அந்த மூதாட்டியிடம் ஏன் அழுகிறீர்கள், அழுகக்கூடாது என்ன பிரச்சனையாக இருந்தாலும் சொல்லுமாறு கூறியிருக்கிறார்.

Tuticorin near, Kanimozhi Mp met an old woman in 100 day work scheme

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலையில் ஈடுபட்டு இருந்த பெண்களை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சந்தித்தார்.

அங்கிருந்த பெண்களிடம் ஊதியம் முறையாகவும் குறித்த நேரத்திலும் கொடுக்கப்படுகிறாதா? என்றும் பணியின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது வாய் பேச முடியாத லெட்சுமி என்ற மூதாட்டி கனிமொழி எம்பி யின் கையை பிடித்துக் கொண்டு திடீரென அழத் தொடங்கியிருக்கிறார்.

Tuticorin near, Kanimozhi Mp met an old woman in 100 day work scheme

இதனால் திகைத்துப் போன கனிமொழி, அந்த மூதாட்டியிடம் ஏன் அழுகிறீர்கள், அழுகக்கூடாது என்ன பிரச்சனையாக இருந்தாலும் சொல்லுமாறு கூறியிருக்கிறார்.

இதையடுத்து வாய் பேச முடியாத அந்த மூதாட்டி செய்கையிலேயே தனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தான் மிகுந்த வறுமையில் இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அவருக்கு ஆறுதல் கூறி அரவணைத்துக் கொண்ட கனிமொழி கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்ததுடன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியின் மகன் கருப்பசாமியை நேரில் சந்தித்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

Tuticorin near, Kanimozhi Mp met an old woman in 100 day work scheme

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மருத்துவமனை வரை சென்று பார்க்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்றாலும் கூட அந்த வாய் பேச முடியாத மூதாட்டிக்காக இந்த விவகாரத்தை அக்கறையுடன் அனுகியிருக்கிறார் கனிமொழி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+