கடவுளே நன்றி.. அனைத்து மத கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனை.. தூத்துக்குடியில் உற்சாக வெள்ளம்
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. இதனால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடியின் ராஜாஜி பூங்கா, பழைய பேருந்து நிலையம், புதுத்தெரு, திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பு மக்களும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக இந்த தீர்ப்பை கொண்டாடி கோஷங்கள் எழுப்பி மகிழ்ந்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அனைத்து மத கோவில்களிலும் சிறப்பு கூட்டு வழிபாடுகள் நடந்தன. தூத்துக்குடி சிவன் கோவில், தூத்துக்குடி ஜாமியா பெரிய பள்ளிவாசல், மாதா கோவில் உள்ளிட்ட அனைத்து மத கோயில்களிலும் நல்லிணக்க பிரார்த்தனைகள் ஏறெடுத்து அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும், இந்த தீர்ப்பை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், ஆலை நிர்வாகம் பல்வேறு சட்டவிதிமுறை மீறல்களை செய்துள்ளதால் ஆலை நிர்வாகம் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications