'புரூஸ்லி' போல பறந்து.. மோசமாக தாக்கிய திருநங்கைகள்! இளைஞரிடம் செல்போன் பறிப்பு! அலறும் தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் புரூஸ்லி, ஜாக்கிசான் போல பறந்து பறந்து ஒரு இளைஞரை கொடூரமாக தாக்கிய திருநங்கைகள், அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போனையும், பணத்தையும் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த துணிகரச் சம்பவம் நடந்துள்ளதால், தூத்துக்குடி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தூத்துக்குடியில் திருநங்கைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரவலாக அதிகரித்த திருநங்கைகள் அட்டகாசம்..
தமிழகம் முழுவதுமே கடந்த ஓராண்டாக திருநங்கைகளின் அட்டகாசம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு வரை, திருநங்கைகள் மக்களிடம் பணம் கேட்பார்கள். பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். இல்லையெனில் சென்று விடுவார்கள். ஆனால், இப்போது பணம் கொடுக்கவில்லை என்றால், அவர்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, தாக்குவது என திருநங்கைகள் வன்முறையில் இறங்குவது அதிகரித்துள்ளது. வாரத்துக்கு 3 முறையாவது இதுபோன்ற செய்திகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. சில தினங்களுக்கு முன்பு கூட கரூரில் பணம் தராத காரணத்தால் இளைஞர்களை அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருக்கிறார். இதுபோன்ற ஒரு பயங்கர சம்பவம்தான் தற்போது தூத்துக்குடியில் நடந்துள்ளது.

புரூஸ்லி போல..
தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் நேற்று ஒரு இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வந்த திருநங்கை ஒருவர் எதுவும் பேசாமல் திடீரென சரமாரியாக தாக்கினார். இதில் அந்த இளைஞர் என்ன நடக்கிறது என்பதை சுதாரிப்பதற்குள் அங்கு 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஓடி வந்து புரூஸ்லி போல பறந்து பறந்து அந்த இளைஞரின் முகத்தில் மிதித்தனர்.

கற்களாலும் தாக்குதல்..
திருநங்கைகளின் இந்தக் கொடூரத் தாக்குதலால் நிலைக்குலைந்து போன அந்த இளைஞரை, பெரிய பெரிய கற்களை எடுத்தும் அவர்கள் தலையில் அடித்தனர். இதில் அவருக்கு தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனையும், பணத்தையும் பறித்த திருநங்கைகள், அந்த இளைஞரை அடித்து விரட்டினர். இதுகுறித்து அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் இருக்கும் திருநங்கைகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

'கராத்தே' தெரிந்த திருநங்கைகள்..
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "சில வருடங்களுக்கு முன்பு வரை மிக அரிதாகவே திருநங்கைகள் இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இப்போது இவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடியில் பல பகுதிகளில் இருக்கும் திருநங்கைகள் ஒரு நெட்வொர்க் போல செயல்படுகின்றனர். இவர்களுக்கு தலைவர்களாக சில திருநங்கைகள் இருப்பார்கள். இவர்களில் பலர் கராத்தே, குங்பூ போன்ற தற்காப்புக் கலைகளை கைத்தேர்ந்தவர்களாக உள்ளனர். அதனால் பட்டப்பகலிலேயே துணிச்சலாக பொதுமக்களை இவர்கள் அடித்து உதைத்து பணம் பறிக்கின்றனர். கராத்தே தெரிந்திருப்பதால் இவர்களை இளைஞர்களால் கூட திருப்பி தாக்க முடியவில்லை. திருநங்கைகளின் அட்டகாசத்தை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications