100 பவுன் கொடு.. குவைத் மாப்பிள்ளை கொடுமை! நரகமான மாமியார் வீடு - ஓராண்டில் தூத்துக்குடி பெண் மரணம்
தூத்துக்குடி: கணவன் வீட்டில் வரதட்சனை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரே ஆண்டிற்குள் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன.
தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெரு பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட். இவரது மகள் அனிஷா. பட்டதாரியான அனிஷாவிற்கும் தூத்துக்குடி லயன் ஸ்டவுன் பகுதியை சேர்ந்த குவைத்தில் வேலை செய்யும் பிரசாத் என்பவருக்கும் கடந்த 2022 ஜனவரி மாதம் 20 ஆம் தேதி திருமணம் நடந்து உள்ளது.
இந்த திருமணத்திற்காக பிரசாத் அவரது குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் 100 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டுள்ளனர். இதில் கில்பர்ட் தனது மகளுக்கு 70 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மீதி 30 பவுன் நகையை சில மாதங்களில் போடுவதாக கூறியுள்ளார்.

வரதட்சனை கொடுமை
திருமணம் முடிந்த பிறகு மீண்டும் தான் வேலை பார்க்கும் குவைத்திற்கு சென்ற பிரசாத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தூத்துக்குடிக்கு வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அனுசாவின் தந்தை கில்பட்டிருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரசாத், உங்களது மகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என கூறி இருக்கிறார்.

உயிரிழந்த அனிஷா
இதனை அடுத்து மருத்துவமனைக்கு கில்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று உள்ளனர். அங்கே உங்களது மகள் இறந்து விட்டார் என பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்க அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மகளை இழந்த கில்பர்ட் தனது அனிஷாவை வரதட்சணை கொடுமை காரணமாக பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

போலீஸ் விசாரணை
இதை அடுத்து தென்பாகம் காவல்துறையினர் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ளதால் தூத்துக்குடி ஆர்டிஓ இச்சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியிடம் தகராறு
பிரசாத் குடும்பத்தினரிடம் உறுதி அளித்த காலத்திற்குள் அனிஷாவின் குடும்பத்தினர் நகையை கொடுக்காத காரணத்தால் அவரை பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. குவைத்தில் இருந்து தூத்துக்குடி வந்தவுடன் பிரசாத் தனது மனைவியிடம் நகை மற்றும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாகவே அனிஷாவை தாய் வீட்டிற்கு அனுப்பாமல் பிரசாத் குடும்பத்தினர் இருந்து உள்ளனர் என்றும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் அடைத்து கொடுமை
அதேபோல், செல்போனில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதபடி அதை லாக் செய்து வைத்து உள்ளனர் எனவும், பிரசாத்தின் குடும்பத்தினரால் அனிஷாவிற்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து உள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளார்கள். வரதட்சணை கொடுமை காரணமாக தூத்துக்குடியில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒட்டன்சத்திரம் தளையூத்து அருவிக்கு வந்த 11 நண்பர்கள்! நீரில் மூழ்கி 4 பேர் பலியான சோகம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications