கோவில்பட்டி டிமார்டில் கட்டுக்கடங்காத கூட்டம்:. மொத்த தூத்துக்குடி மக்களுக்கும் குஷி.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டி மார்ட் நிறுவனம் தனது கடையை திறந்துள்ளது. கடந்த டிசம்பர்10ம் தேதி அன்று கோவில்பட்டியில் அவென்யூ சூப்பர்மார்ஸ் லிமிடெட் நிறுவனம், புதிய டிமார்ட் கடையைத் திறந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்தியாவின் முழுவதும் இந்நிறுவனத்தின் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது. டிமார்ட் திறந்ததை கேள்விப்பட்டு மொத்தகோவில்பட்டி மக்களும் சுற்றுவட்டார மக்களும் திரண்டு சென்று வருகிறார்கள். அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இது அங்குள்ள வணிகத்தை மொத்தமாக அபகரிக்கும் என்ற அச்சம் வணிகர்களிடையே நிலவுகிறது.

ஒரு ஊரில் டி மார்ட் வருகிறது என்றால், அங்குள்ள ஏராளமான சிறு மற்றும் நடுத்தர கடைகளின் வணிகம் மொத்தமாக பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மொத்தமாக வாங்கினால் மக்களுக்கு லாபம் என்பதால், டி மார்டில் போய் வாங்குகிறார்கள். டிமார்ட்டை பொறுத்தவரை ஆரம்பத்தில் இந்தியாவின் பெருநகரங்களில் மட்டும் தான் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே, அகமதாபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் தான் அதிகம் இருந்தது.

Uncontrollable crowd at the D-Mart in Kovilpatti The entire Tuticorin district is overjoyed

அதன்பிறகு இரண்டாம் தர மெட்ரோ நகரங்களான கோவை, கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மங்களூரு, விசாகப்பட்டினம், விஜயவாடா, போபால், லக்னோ, இந்தூர், போபால், மதுரை போன்ற நகரங்களில் டி மார்ட் அமைக்கப்பட்டது. அதாவது குறைந்தது 10 லட்சம் மக்களுக்கு அதிகமாக உள்ள ஊரில் தான் டிமார்ட் அமைக்கப்பட்டது. அதன்பிறகு 5 லட்சம் மக்கள் என்று கடைகள் திறக்கப்பட்டது. இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ள ஊர்களிலும் டிமார்ட் திறக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், திருச்சி, தூத்துக்குடி என தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் டிமார்ட் வந்துவிட்டது.

பெரிய நகரங்களை தாண்டி சிறியநகரமான கோவில்பட்டியில் டிமார்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிமார்ட் கடை கடந்த டிசம்பர் 10ம்தேதி திறக்கப்பட்டது. இந்த கடை திறக்கப்பட்டதன் மூலம் டிமார்ட் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது. கோவில்பட்டியில் டிமார்ட் திறந்ததை கேள்விப்பட்டதும், பலரும் ஆர்வமுடன் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக கடையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. ஏற்கனவே கோவில்பட்டியைச் சேர்ந்த பலர் மாவட்ட தலைநகரான தூத்துக்குடிக்கு சென்று வாரம் வாரம் பொருட்களை டிமார்டில் வாங்கி வந்தார்கள்.

இப்போது கோவில்பட்டியிலேயே திறக்கப்பட்டதால் டிமார்ட்டுக்கு கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் லைனில் நின்று பில் போடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது. திருவிழாவிற்கு போன மக்கள் கூட்டம் போல் டிமார்ட் கடை இருந்தது. இந்த வேகத்தில் மக்கள் போய் டிமார்டில் பொருட்கள் வாங்கினால், கோவில்பட்டியில் உள்ள சிறுகுறு மளிகை கடைகள் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே மளிகை கடைகள் எல்லாம் வேகமாக மாயமாகி வருகிறது. கோவில்பட்டியின் வணிகமே சிறுகுறு வணிகம் தான். அவர்களை டி மார்ட் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் குறைந்த விலையில் பொருட்கள் எல்லாமே கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+