இப்போ எலக்சன் வச்சாலும்.. விஜய் 180 சீட் ஜெயிப்பார்! கள நிலவரம் சொல்லுது! அடித்துச் சொல்லும் வைகோ!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய கரெப்சன் என்ற மக்களுக்கு கேடான கொடிய நோய் ஒன்றை தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அதை நீக்கி இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது எனவும், தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை தேர்தல் வந்தால் 180க்கும் மேற்பட்ட இடங்களை விஜய் அவர்கள் ஜெயித்து காட்டுவார் என மக்கள் மனநிலைப்பாடு. கள சூழலும் அப்படித்தான் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை தமிழ்நாட்டில் இருந்து வேரோடு அகற்றுவதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட காலமாகத் தீவிர சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, அம்மரங்களை தானே அகற்றும் வகையில் களப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

Vaiko Vijay tvk

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் நிகழ்ச்சியினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வைகோ

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஸ்டெர்லைட் பிரச்சனை, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, சீமைகருவேல மரங்கள் அகற்றம் என பல்வேறு பிரச்சினைகளுக்காக 20 ஆண்டுகாலமாக போராடி வருகிறேன். முல்லை பெரியாறு அணை நீர் தேக்கும் அளவு முதல்வராக எம்ஜிஆர் இருந்த போது குறைக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையை உடைக்க முற்பட்டபோது, கேரளா அரசு தீவிரமாக இருந்தது. அதனை எதிர்த்து நடைபயணம், மறியல் என கட்சி கொடி இல்லாமல் போராட்டம் நடத்தினோம்.

நரேந்திர மோடி

உச்சநீதிமன்றம் குழு அமைத்து, ஆய்வு நடத்தி அணை பலமாக இருப்பதாக தெரிவித்தது. தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்தார். அதற்கும் போராட்டம் நடத்தினேன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் தடைவிதித்தது. மேகதாது அணையை கட்ட கர்நாடக முயற்சித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். தமிழகத்தில் 8 மாவட்டங்கள் பாதிக்கப்படும்.

பயிர் கடன் தள்ளுபடி

கட்சி கொடி இல்லாமல் போராடினோம். எட்டாவது மாவட்டமாக இன்று இங்கு சீமை கருவேலம் மரங்களை அகற்ற வந்துள்ளேன். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையாக நினைத்துசெய்ய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பத்தில் நானும் ஒரு கோரிக்கையாக வைத்துள்ளேன்.

விஜய்

நிதி நெருக்கடியை நிறைவேற்ற முடியாமல் அதை எப்படி செயல்படுத்த முடியும். ஒரு காலேஜ் நடத்தினோம்னா மினிமம் கட்டணம் தான் வாங்கினோம். ஆனால், கட்டிடம் கட்ட 15 லட்சம் கட்ட சொல்லுகிறார்கள். தலைவிரித்து ஆடிய கரெப்சன் என்பது கொடிய நோய். மக்களுக்கு கேடான ஒன்றை தலைவர் தலைவர் ஜோசப் விஜய் அதை நீக்கி இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

180 தொகுதிகள்

மீண்டும் ஒருமுறை தேர்தல் வந்தால் 180 க்கும் மேற்பட்ட இடங்களை விஜய் அவர்கள் ஜெயித்து காட்டுவார் என மக்கள் மனநிலைப்பாடு. கள சூழலும் அப்படித்தான் உள்ளது. செந்தில் பாலாஜி மீது எவ்வளவு ஊழல் உள்ளது அவர் அண்ணா திமுகவில் இருக்கும் பொழுது எவ்வளவு ஊழல் நடந்தது? என அனைவருக்குமே தெரியும். தற்போதைய சூழலில் தவெக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+