ஃபைல்ஸ் மூவ் ஆக மாட்டேங்குது.. விஜய் அரசை முடக்கும் ஆபீசர்ஸ்! பெரிய பிரச்சினை.. விஜய்க்கு வார்னிங்!
தூத்துக்குடி: ஊழலை அறவே கலைந்து எறிய வேண்டும், அதுதான் அரசியலுக்கு புற்றுநோய், அந்த ஊழலை அகற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய், ஆனால் மாதம் லட்சம் மற்றும் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய சில அதிகாரிகள் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.. பைல்களை நகர்த்துவதும் கிடையாது, கோப்புகள் நகர்வதும் கிடையாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ரமேஷ் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரது மனைவி ரேணுகா தேவி இருவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ," கல்யாண தம்பதிகளை வாழ்த்துவதற்கு தகுதி பெற்றவன் நான். என்னைப்போன்றும் எனது துணைவியார் ரேணுகாதேவி போன்றும் ஒரு குடும்பம் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய தகுதி பெற்றவன்.
வைகோ
அதனால் தான் என்னுடைய சுயசரிதை நான்கு தொகுப்புகளையும் எனது மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கூறினேன். என்னுடைய இன்பத் துன்பங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஒரு நகையோ புடவையோ கேட்காமல் இப்படி ஒரு இல்லற வாழ்க்கை யாருக்கும் அமையாது. இலக்கியங்களில் இருந்து நான் பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருப்பேன் . மைக் கிடைத்தால் இவர் விட மாட்டார் போல என நினைத்து விடுவார்கள்.
மதிமுக
இதே மண்டபத்தில் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளேன். வாழ்த்த ஆரம்பித்ததும் பாதியில் எழுந்து சென்று விடுவார்கள். அதுவும் ஒன்பது மணிக்கு சாப்பாடு மிஸ் ஆகி விடும் என்று நினைத்து, ஆனால் இன்றைக்கு 12 மணிக்கு மேலாகியும் எழுந்திருக்கவில்லை. அது எனக்கு கொடுக்கக்கூடிய மதிப்பு இல்லை. இந்த திருமணத்திற்கு கொடுக்கக் கூடிய மதிப்பு . யூடியூபில் எனது பேச்சை பார்த்து விட்டு கன்னியாகுமரியில் 94ல் மேற்கொண்ட நடை பயணம் குறித்து விமானத்தில் சென்ற போது சிலர் பேசினர். இந்த நடை பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.
ஊழல்
அன்றைக்கு இது போன்ற யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் எதுவும் இல்லை என்பதால் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. அன்றைக்கு திரண்டவர்கள் என்றைக்கும் என்னுடன் நிற்கின்றனர். மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று நான் எடுத்த முடிவு தான் சரி. இந்த இயக்கம் பொலிவுடன் வளரும். ஊழலை அறவே கலைந்து எறிய வேண்டும், அதுதான் அரசியலுக்கு புற்றுநோய், அந்த ஊழலை அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு இன்றைக்கு முதல்வர் ஜோசப் விஜய் முயற்சிக்கிறார்.
ஊழல் அதிகாரிகள்
லட்சங்கள்,கோடிகள் கைமாறிய அதிகாரிகளும் இருக்கிறார்கள், நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள். ககன்தீப் சிங் பேடி போன்ற நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறார்கள். மாதம் லட்சம் மற்றும் கோடிக்கணக்கில் வீட்டில் பணம் கொட்டோ கொட்டிய அதிகாரிகளும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகள் இந்த அரசாங்கத்தை எப்படியாவது ஸ்தம்பிக்க செய்ய வேண்டும் என்ற முடிவோடு பைல்களையும் நகர்த்துவது கிடையாது , எந்த கோப்புக்களும் நகர்வது கிடையாது.
ஜோசப் விஜய்
இந்த அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை இலாக்காக்களில் இருந்து விடுவிக்க வேண்டும், புதிதாக வந்த ஐஏஎஸ் அதிகாரிகளில் நேர்மையானவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு பொறுப்பு கொடுங்கள் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இடம் என்னுடைய கருத்தாக சொன்னேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
