வெறிநாய் போல் சுற்றி திரிந்த தர்ம முனீஸ்வரன்..விளாத்திகுளம் மாணவி கொ***து எப்படி? வெளியான ஷாக் தகவல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தர்ம முனீஸ்வரன், திருட்டு வாகனத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க வருகிறார்களா? என தேடித்தேடி அலைந்து உள்ளான். மேலும் மாணவி கொலை செய்யப்பட்ட பிறகும் அந்தப் பகுதியில் பல நாட்களாக சுற்றி வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்துகுளம் அருகே உள்ள வேடாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த மாதம் 10ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமானார். மாணவி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர்.
அடுத்த நாள் காலை, கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மாணவி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாணவி கொலை
இதையடுத்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அருகிலுள்ள சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (39) என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
மதுரை சிறைக்கு மாற்றம்
கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையம் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு கருதி இரவோடு இரவாக அவனை மதுரை மத்திய சிறைக்கு போலீசார் மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளி தர்ம முனீஸ்வரன் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தர்ம முனீஸ்வரன்
கடந்த 2020ஆம் ஆண்டு ஈழஏரல் பகுதியில் 60 வயதான பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றிருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர், தனது தாயின் உதவியுடன் மேல் முறையீடு செய்ததன் அடிப்படையில் ஜாமீன் பெற்று வெளியில் வந்திருந்தார். ஜாமீன் நிபந்தனையாக தினமும் தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
பெண்களை குறிவைத்து தேடுதல்
பணத் தட்டுப்பாடு காரணமாக, பார்த்திபனூர் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி, அதைப் பயன்படுத்தி பல கிராமங்களில் சுற்றித் திரிந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தனியாக காட்டுப்பகுதிக்கு செல்லும் பெண்கள் மற்றும் இயற்கை உபாதைக்காக வெளியே வரும் பெண்களை குறிவைத்து அவர் கண்காணித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், குற்றவாளி தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, குறுக்குச்சாலை - குளத்தூர் சாலையில் சுற்றித் திரிந்துள்ளார்.
கண்காணிப்பு கேமராக்கள்
அப்போது வேடநத்தம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதிகளை முன்கூட்டியே கவனித்து, தனியாக வரும் பெண்ணை எதிர்பார்த்து பதுங்கி இருந்துள்ளார். அந்த நேரத்தில் மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அங்கு கிடந்த கம்பியை பயன்படுத்தி தலையின் பின்புறத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவி மயங்கி கீழே விழுந்ததும், அவரிடம் நகைகள் உள்ளதா என பார்த்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை
அதன் பிறகு, மாணவியின் உடலை அருகிலிருந்த முட்புதர் பகுதியில் இழுத்து போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகும், சில நாட்கள் அதே கிராமப்பகுதியில் சுற்றித் திரிந்து, வழக்கு தொடர்பான தகவல்களை பொதுமக்களிடமே கேட்டு அறிந்து கொண்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவல்கள் வெளிவந்ததன் மூலம், குற்றவாளி முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொடூர செயலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது என கூறுகின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications