"போன்ல யாரு".. கணவனிடம் அடிக்கடி சிக்கிய புதுமணப்பெண்.. கடைசியில் பகீர் முடிவு.. என்னாச்சு?
மனைவியை கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்
தூத்துக்குடி: திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணை வெட்டி கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்ராஜ்.. 24 வயதாகிறது.. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த மாரிசெல்வி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மாரிசெல்விக்கு 19 வயதாகிறது.. இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் தெரிகிறது.. இது சந்தேகமாக வெடித்துள்ளது.. ஒவ்வொரு முறை போன் வரும்போதும், போனில் யார் என்று கேட்டுக் கொண்டே இருந்துள்ளார் பொன்ராஜ்..

தகராறு
இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே பொன்ராஜின் அம்மா, மாரிசெல்வியை சிறிது நாட்கள் அவரது பெற்றோர் வீட்டில் சென்று இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்... இதனால் மாரிசெல்வியும் கடந்த 10 நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

தம்பதி
இந்நிலையில் மாரிசெல்வியிடம் சமாதானம் பேசி அழைத்து செல்ல நேற்றிரவு மாமியார் வீட்டுக்கு பொன்ராஜ் சென்றுள்ளார்.. அப்போது, அவரது நண்பர்களான அண்ணாநகரை சேர்ந்த மந்திரமூர்த்தி 22, சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முத்துகுமார் ஆகிய 2 பேரையும் உடன் அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்... குடும்பம் நடத்த வருமாறு மாரிசெல்வியை பொன்ராஜ் அழைத்துள்ளார்..

அரிவாள் வெட்டு
இது தொடர்பான வாக்குவாதம் மறுபடியும் தம்பதிக்குள் நடந்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த பொன்ராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிசெல்வியின் தலையில் வெட்டிவிட்டார்.. பிறகு அவரது உடலிலும் சரமாரியாக குத்தினார்... தடுக்க வந்த மாமியாரின் கையையும் கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்து பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். இந்த கத்திக்குத்து தாக்குதலில் மாரிசெல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

வலைவீச்சு
தகவல் அறிந்த தாளமுத்து நகர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.. உயிருக்கு போராடி கொண்டிருந்த மாரியம்மாளையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்... திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண்ணை அவரது கணவர் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications