தூத்துக்குடியில் "பூத்த" தகாத உறவு.. பக்கத்து வீட்டு கண்ணன்.. எதிர்வீட்டு மாதவன்.. அப்பறம் என்னாச்சு
தூத்துக்குடி: இளம்பெண் ஒருவரின் பிடிவாதம், ஒரு உயிரையே காவு வாங்கிவிட்டது.. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து, அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் தூத்துக்குடி போலீஸார்.. என்ன நடந்தது? யாரிந்த பெண்?
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. 6 வயதில் மகன் இருக்கிறான்.. ஆனால், தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்துவிட்டார்.. தற்போது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

பக்கத்து வீடு: இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் கண்ணன்.. இவருடன் நாளடைவில் அந்த பெண்ணுக்கு தகாத உறவு ஏற்பட்டது.. சிறிது நாள் கழித்து, எதிர்வீட்டை சேர்ந்த மாதவன் என்பவருடனும் தகாத உறவு ஏற்பட்டுவிட்டது. அதாவது ஒரே நேரத்தில் 2 நபர்களிடமும் பழகிவந்துள்ளார்.. இந்த விஷயம், கண்ணன், மாதவன் இருவருக்கும் தெரியாது..
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், இந்த பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்ணன் உணர்ந்துள்ளார்.. பிறகு, மாதவனுடன் தகாத உறவு இருப்பதையும் கண்டுபிடித்துவிட்டார்.. இதையடுத்து கண்ணனுக்கும், மாதவனுக்கும் தகராறு வெடித்தது.
தகராறு: இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சென்ற மாதவன், "கண்ணனுடன் பேச கூடாது.. தகாத உறவை கைவிட வேண்டும்" என்று சொன்னார்.. ஆனால், இதற்கு அந்த பெண் மறுப்பு சொல்லியிருக்கிறார்.. தொடர்ந்து கண்ணனுடன் பழகியும் வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று, கண்ணனுடன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தார் இளம்பெண்.. கண்ணனிடம் பேசிவிட்டு, அங்கிருந்து நேராக மாதவன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. இதனால் ஆத்திரம் அடைந்த மாதவன், நேராக கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்துக் கொண்டு, கண்ணன் வீட்டிற்குள் நுழைந்தார்.. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த மாதவன், கண்ணனை ஆவேசம் தாங்காமல் கத்தியால் குத்தினார். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
ரத்த வெள்ளம்: கண்ணனை கத்தியால் குத்துவதை பார்த்து பதறிப்போன இளம்பெண், மாதவனை தடுக்க வந்தார்.. ஆனால், மாதவனோ, இளம்பெண்ணையும் சேர்த்தே கத்தியால் குத்தினார்.. இதில் இளம்பெண் அங்கேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.. இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, இளம்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மாதவனை கைது செய்து, விசாரித்து வருகிறார்கள். உயிரிழந்த கண்ணனுக்கு திருமணமாகிவிட்டது.. 2 மகள்கள், 2 மகன்கள் இருக்கிறார்களாம்.. இளம்பெண் ஒருவர், ஒரே நேரத்தில் இருவருடன் தகாத உறவு வைத்தது தொடர்பாக, ஒரு உயிரே பறிபோய்விட்டது தூத்துக்குடியில் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications