அரசு மருத்துவமனையில் தவறான மருந்து கொடுத்ததாக புகார்.. பச்சிளம் குழந்தைக்கு கை, கால்களில் நடுக்கம்
தூத்துக்குடி: பச்சிளம் குழந்தைக்கு தவறான மருந்தை கொடுத்ததால் அவருடைய கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருடைய மனைவி சிந்து. இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்டம் தலைமை மருத்துவமனையில் பிரசவம் ஆனது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு கடந்த 31 ஆம் தேதி கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் காய்ச்சல் வந்தது.
காய்ச்சலை குறைக்கும் சிரப்பை கொடுக்குமாறு அங்கு பணியில் இருந்த மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். காய்ச்சலுக்கான மருந்தையும் அவர் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகதத்தில் மருந்து வாங்கிச் சென்றனர்.
மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றதும் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் வாங்கிய சிரப்பை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தையின் கைகள், கால்களில் நிற்காமல் நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். முதலில் குழந்தையை பரிசோதித்த ஊழியர்கள் மழை பெய்ததால் குழந்தைக்கு நடுக்கம் இருப்பதாக கூறினர். பின்னர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர், காய்ச்சலுக்கு என்ன மாத்திரை கொடுத்தீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது மருத்துவமனையில் பரிந்துரை செய்த மருந்தை எடுத்துக் காட்டியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் இந்த மாத்திரையை யார் உங்களுக்கு கொடுத்தது, இது சளிக்கு கொடுக்கும் மாத்திரையாச்சே என கேட்டுள்ளார். தற்போது குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் நடுக்கம் நிற்க வேண்டுமானால் நரம்பியல் மருத்துவரைத்தான் அணுக வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் மே 31 ஆம் தேதி முதல் நேற்று வரை மருத்துவமனைக்கு நரம்பியல் மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்கவே இல்லையாம். இதனால் குழந்தை அவதிக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில் பச்சிளம் குழந்தையை தூக்கி கொண்டு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட சென்றோம். அங்கு கொடுத்த மருந்து கை, கால் நடுக்கம் ஏற்பட்டது. இதனால் நரம்பியல் மருத்துவரை ஆலோசிக்க சொன்னார்கள். ஆனால் அவரும் இதுவரை குழந்தைக்கு பரிசோதனை செய்யவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் அகத்தியனிடம் கேட்ட போது அவர் கூறுகையில் தடுப்பூசி போட்ட போது மருத்துவர் சரியான மாத்திரையைத்தான் பரிந்துரைத்துள்ளார். இவர்கள் தவறாக வாங்கிச் சென்றிருக்கலாம். குழந்தைக்கு மாத்திரை வாங்கும் போது வேறு சிலருக்கும் மருந்து வாங்கியிருக்கலாம்.
அதில் மருந்தை குழந்தைக்கு மாற்றி கொடுத்திருக்கலாம். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ஆபத்து ஏதும் இல்லை என கூறியுள்ளார். மேலும் நரம்பியல் மருத்துவர் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும்தான் வருவார். அவசரம் என்றால் மட்டுமே அழைப்போம். கூடுதலாக இந்த மருத்துவமனையில் பணிபுரிய நரம்பியல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என அகத்தியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் குழந்தைக்கு மட்டுமே மருந்து வாங்கியதாகவும் வேறு யாருக்கும் மருந்து வாங்கவில்லை என்றும் குழந்தையின் தந்தை மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications