ஏரல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் சரணடைந்த இளைஞரின் மனைவி திடீர் மரணம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் சரணடைந்தவரின் மனைவி நேற்று மரணமடைந்தார்.
ஏரல் அருகே உள்ள தீப்பாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபாலின் மகன் முருகவேல் (39). இவர் கடந்த 31-ஆம் தேதி இரவு ஒரு ஹோட்டலில் வெஜிடபிள் பிரைடு ரைஸ் கேட்டு மதுபோதையில் தகராறு செய்தார்.

தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளர் பாலு (55) சம்பவ இடத்திற்கு வந்து முருகவேலை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த முருகவேல், எஸ்ஐ பாலு மற்றும் தலைமைக் காவலர் பொன் சுப்பையா ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேனை ஓட்டி வந்து மோதினார்.
இதில் எஸ் ஐ பாலு உயிரிழந்தார். இதையடுத்து விளாத்திகுளம் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் முருகவேல் சரணடைந்தார். பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
ஏறகெனவே முருகவேல் மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததால் அவரது மனைவி செல்வலட்சுமி கடந்த 30ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ஏரல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அண்மையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வீட்டில் இருந்த செல்வலட்சுமிக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2-ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் மகனும் 3 வயதில் மகளும் உள்ளனர்.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications