தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்.. எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை பாயுமா? கனிமொழி சொன்ன பதில்
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை கொண்டு தமிழக முதல்வர் மக்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தபணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சியில் முருகேசன் நகர், பிரையண்ட் நகர், விஎம்எஸ் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பல மணி நேரம் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இந்தப் பணிகளை விரைவுப்படுத்துவதற்கும் சரியான முறையில் பணிகளை முடிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது.

எம்பி கனிமொழி
பின்னர், செய்தியாளர்களுக்கு தூத்துக்குடி எம்பி கனிமொழி பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்து பொது மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மழை நீர் தேங்குவதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

நீர் தேங்காது
எனவே இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி மூலமாக பல்வேறு பகுதிகளில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

60 சதவீதம் பணிகள் நிறைவு
இதுவரை சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மழை பெய்தால் இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தான கேள்விக்கு அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிலரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விசாரணை ஆணையம்
முதல்வர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்துவிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இன்னும் விசாரித்து விட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார் என்றார் அப்போது கனிமொழியிடம் . முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பல தரப்பிலிருந்து வரக்கூடிய இந்த கேள்வி நியாயமான கேள்வி. முதல்வர் விசாரித்து தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என கூறினார்.

ஆட்சி பாரபட்சமின்றி குரல்
தமிழகத்தின் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஆட்சி பாரபட்சமின்றி குரல் கொடுத்து வருபவர் கனிமொழி. சாத்தான்குளம் தந்தை- மகன் மரணம் தொடர்பாகவும் இவர் குரல் கொடுத்துள்ளார். அது போல் திமுக ஆட்சியில் ஆத்தூரில் சாலையில் விவசாயி ஒருவரை போலீஸார் தாத்கியதில் அவர் இறந்ததாக சொல்லப்படும் சம்பவத்திலும் முதல் ஆளாக தனது குரலை உயர்த்தினார். அது போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். மேலும் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறுமி ஸ்னோலினின் சகோதரனின் திருமண விழாவில் அண்மையில் அவர் கலந்து கொண்டார். இது வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் தொகுதி மக்கள் மீது அளவுக்கடந்த பாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!











Click it and Unblock the Notifications