வேலூருக்கு வந்த பிரபாகரன்.. விறுவிறுன்னு வீட்டிற்குள் போனால் ஏராளமான தங்கம்.. இறுதியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் கொசப்பேட்டை திருமலை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வேலூரில் தனியார் காப்பீட்டு நிறுவன மேலாளர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 15ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர், வீட்டில் பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை திருடி சென்றுவிட்டார். இதுபற்றி சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், பிரபாகரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 28 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சில திருடர்கள் பூட்டியிருக்கும் வீட்டை குறி வைத்து பணம், தங்க நகைகளை திருடுவதற்கு உடனடியாக திட்டமிடுவார்கள்.. திருடுவதில் கைதேர்ந்தவர்கள் உடனே பூட்டை உடைத்து தங்க நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுவிடுவார்கள்.. அப்படித்தான் ஒரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

gold jewellery house

வேலூர் கொசப்பேட்டை திருமலை தெருவில் 56 வயதாகும் பாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 15-ந் தேதி தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிக்கு சென்ற பாலகிருஷ்ணன் பிற்பகலில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன், உடனே வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வேலூர் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினார்கள்.

வெறும் இரண்டு நாளில் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடியவரை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நபர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலை பகுதியில் திரிந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அவர் தூத்துக்குடி மாவட்டம், வன்னியகாடு பகுதியில் உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த 42 வயதாகும் பிரபாகரன் என்பது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகரன் நாடோடியாக ஒவ்வொரு மாவட்டமாக செல்வது வழக்கமாக வைத்திருப்பாராம். அப்படி அவர் ஆங்காங்கே செல்லும்போது அங்கு ஏதாவது ஒரு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாராம். அப்படித்தான் வேலூர் கொசப்பேட்டையில் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 28 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.23 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள். கைதான அவர் மீது திண்டுக்கல், திருச்சி, மதுரை என பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. , வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் பிரபாகரன் திருடி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+