காய் நறுக்கி.. சமைத்து சாப்பிட்டு விட்டு.. 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற போக்கிரிகள்!
50 சவரன் நகையை மர்ம கும்பல் ஒன்று திருடி சென்றுள்ளது
Recommended Video
வேலூர்: காய்கறிகளை நறுக்கி.. மக்ரூனி சமைத்து சாப்பிட்டுவிட்டு.. சாவகாசமாக 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது ஒரு போக்கிரி கும்பல்!
வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் பாரூக். 50 வயதான இவர் ஒரு தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

2 நாட்களுக்கு முன்னாடி, வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றிருந்தார். இன்று காலை அவரது வீடு திறந்து கிடக்கவும், அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பாரூக்கிற்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து, வாணியம்பாடியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் சொல்ல, அவர்களும் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் திருடுபோனது தெரியவந்தது.

மேலும் வீட்டுக்குள் நுழைந்ததுமே சமையல் வாடை வந்தது. அதனால் கிச்சனுக்கு சென்று பார்த்தபோது, காய்கறிகளை நறுக்கி மக்ரூனி சமைத்து சாப்பிட்டு விட்டு அந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் சொல்லவும், கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மக்ரூனி சமைத்து சாப்பிட்டுவிட்டு, கொள்ளையடித்து சென்றவர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications