மொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை!
5 வயது மகளை 50 வயது தந்தை நாசம் செய்துள்ளார்
வேலூர்: மொத்தம் 5 மனைவிகள்.. இதில், 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்துள்ளான் ஒரு காமுகன்!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் ஷான்பாஷா. வயசு 50 ஆகிறது. சொல்லி கொள்கிற மாதிரி எந்த வேலைக்கும் போறது இல்லை. ஆனால் அடிக்கடி பெண்களை பார்த்தால் லவ் வந்துவிடும்.
எப்படியாவது பேசி கரெக்ட் செய்து, அவர்களை விழ வைத்துவிடுவார். ஒருசிலரிடம் கல்யாணம் செய்து கொள்வதாக சத்தியமே செய்து ஏமாற்றி உள்ளார்.

குழந்தை
இதுவரைக்கும் இவருக்கு 6 கல்யாணம் ஆகி உள்ளது. இதில் 3-வது மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவருக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. இந்த குழந்தை ஷான்பாஷாவின் தங்கை வீட்டில்தான் வளர்கிறாள்.

குடிபோதை
தினந்தோறும் இரவு ஆனால், குழந்தையை என் கூடவே படுக்க வெச்சிக்கிறேன் என்று சொல்லி தூக்கி கொண்டு போய்விடுவாராம் ஷான்பாஷா. இப்படித்தான் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில்.. குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் ஷான் பாஷா. வெளியில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை பெட்ரூமுக்கு தூக்கி சென்று நாசம் செய்திருக்கிறார்.

கொடுமை
மறுநாள் காலை குழந்தை வலி பொறுக்க முடியாமல், ஷான்பாஷா தங்கையிடம் அழுதுள்ளாள். அதனால் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு தான் ஷான்பாஷா பெற்ற மகளை இப்படி கொடுமை செய்திருந்தது தெரியவந்தது.

போக்சோ
உடனடியாக டாக்டர்கள் போலீசுக்கு தகவல் சொல்லவும், ஷான்பாஷை பிடித்து தனி பாணி விசாரணை நடத்தினர். அதில் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒத்துக்கொண்டார் ஷான்பாஷா. இப்போது மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
