வேலூர் ஆவினில் 6 செயல் அலுவலர்கள் பணியிடமாற்றம்! 8 பேருக்கு நோட்டீஸ்! ஒரே பதிவெண் வாகனத்தால் அதிரடி
வேலூர்: வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இருவாகனங்கள் இயங்கிய விவகாரத்தில் 6 செயல் அலுவலர்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 துறை தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பால்வளத்துக்கு என்று தனித்துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் கீழ் அரசு நிறுவனமான ஆவின் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஆவினில் அடிக்கடி முறைகேடு புகார்கள் எழுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி, இப்போதைய திமுக ஆட்சியிலும் சரி ஆவின் மீது சில புகார்கள் எழுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் வேலூர் ஆவினில் நடந்த முறைகேடு தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மூலம் தான் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு முகவர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சமீப காலமாக முகவர்களுக்கு சரியாக ஆவின் பால் கிடைப்பது இல்லை என்ற புகார்கள் எழுந்தன. மேலும் பால் திருட்டு நடப்பதாகவும், இதனால் தான் முகவர்களுக்கு பால் கிடைப்பதில் பிரச்சனை இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு ஆய்வு செய்தார். அப்போது ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்களில் பால் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதில் ஒரு வாகனம் அனுமதி பெற்ற நிலையில் இன்னொரு வாகனம் போலி பதிவெண்ணில் இயங்கியதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதோடு சமீபகாலமாக ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களை பயன்படுத்தி தினமும் 2500 லிட்டர் பால் திருட்டு சம்பவம் நடைபெற்றதும் அம்பலமானது. இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் துவங்கின. முதற்கட்டமாக ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இரு வழித்தடங்களில் இயங்கியதை கண்காணிக்க தவறிய சாய்ராம் செக்யூரிட்டி ஏஜென்சியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது வேலூர் ஆவினில் செயல் அலுவலர்கள் 6 பேரை அதிரடியாக பணிஇடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு 8 துறை தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில் பணியில் கவனக்குறைவாக இருந்தது ஏன்? இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்கள் யார்? என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதோடு இந்த நோட்டீசுக்கு வரும் புதன்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நோட்டீஸ்களுக்கான விளக்கம் கிடைத்த பிறகு அடுத்த கட்டமாகவும் சிலர் மீது நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது. இதனால் வேலூர் ஆவின் முறைகேடு அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications