10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருமணம் செய்த 10 நாளிலே மகள் விதவை ஆகிவிட்டதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த குனிச்சிமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். கூலி தொழிலாளியான இவருக்கு வயது 50. வள்ளியம்மாள் என்ற மனைவியும் இரண்டு ஆண் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

A Man suicide near Thirupattur

மகளை செல்லமாக வளர்த்த பெரியண்ணன் படிக்க வைத்து பட்டதாரியும் ஆக்கினார். ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்தனர்.

ஆனால் கல்யாணம் ஆன பத்தே நாளில் மாப்பிள்ளை இறந்துவிட்டார். இதனால் கணவனை இழந்த சுமதி அப்பா வீட்டிற்கு வந்துள்ளார். மகளுக்கு நேர்ந்த நிலைமையை எண்ணி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார் பெரியண்ணன்.இந்நிலையில் மகளுடன் எதிகாலத்தை பற்றி மனம் விட்டு இன்று பேசினார்.

பிறகு நேராக மொளகரம்பட்டி நந்தனம் கலைக் கல்லூரி அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் உடலை கைபற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+