மீன் வலையில் சிக்கிய ராணிப்பேட்டை பெண்கள்.. 30 லட்சம் சம்பாதித்த ராமேஸ்வரம் காவலர்.. எப்படி?
வேலூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரியன் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த 4 பெண்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பணம் மோசடி புகார் அளித்தனர். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
ஏமாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், சதுரங்க வேட்டை படம் பாணியில் ஏமாற்றுவதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். 10000 போட்டால் 20000 , ஒரு லட்சம் போட்டால் 2லட்சம் என்று நம்ப முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். அதில் சிலருக்கு மட்டும் பணத்தை சரியாக கொடுப்பார்கள்.

அதாவது குறைவான பணம் போட்டவர்களுக்கு கொடுப்பார்கள். சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல் சில மாதங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்வார்கள். இறுதியாக மொத்தமாக பல ஆயிரம் பேரை ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதேபோல் சிலர் தொழிலில் பார்ட்னர் ஆகலாம் என்று கூறி கவர்ச்சிகரமாக பேசுவார்கள். அவர்களை நம்பிமுதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்படுவார்கள். அப்படித்தான் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு பகுதியை சேர்ந்த 30 வயதாகும் விஷ்ணு பிரியன், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த 4 பெண்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பணம் மோசடி புகார் அளித்தார்கள்
அதன்பேரில் ராணிப்பேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு பிரியனிடம் விசாரணை நடத்தினர். அதில் விஷ்ணு பிரியன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது அரக்கோணத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்கு சென்று வந்ததும், அங்கு சில பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
அந்த பெண்களிடம் விஷ்ணு பிரியன் தான் ராமேஸ்வரத்தில் படகுகளை வைத்து மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், அதில் அதிக லாபம் கிடைக்கிறது. நீங்களும் பணம் கொடுத்தால் பங்குதாரராக சேர்த்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறினாராம். இதனை நம்பிய அந்த பெண்கள் விஷ்ணு பிரியனிடம் சுமார் ரூ.30 லட்சம் மற்றும் 10 பவுன் நகைகளையும் கொடுத்துள்ளாராம். ஆனால் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளாமலும், பணம், நகைகளை திருப்பி தராமலும் காலம் கடத்தி வந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காவலர் விஷ்ணுபிரியனை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications