நடிகை ராகவியின் கணவர் தற்கொலை.. "கேமிரா திருடன்" என தகவல் பரவியதால் தூக்கில் தொங்கினார்
Recommended Video
வேலூர்: நடிகை ராகவியின் கணவர் ஏரிக்கரை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜா சின்ன ரோஜா, மகராசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராகவி. சினிமாவை தவிர சின்னத்திரையில் கடந்த 26 வருஷங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.

இவரது சீரியல்களுக்கு தனி வரவேற்பும் உண்டு. இவரது கணவர் பெயர் சசிகுமார். கேமராமேன் ஆக வேலை பார்க்கிறார். பூந்தமல்லி அருகே வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில், ஜோலார் பேட்டை ஜங்ஷன் பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஒரு ஏரிக்கரை உள்ளது. இந்த ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, மனைவி ராகவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வாட்ஸ்அப்பில் ஒரு பொய்யான தகவலை பரப்பியதால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக கதறினார். ஒரு தனியார் ஸ்டுடியோவில் கேமிரா மேனாக வேலை பார்த்த சசிக்குமார், வாடகைக்கு எடுத்து கொண்டு போன கேமிராவை திரும்பவும் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த கேமிரா தொலைந்து விட்டதாகவும் சசிகுமார் சொல்லி உள்ளார். ஆனால் கடன் சுமை காரணமாக, அதை அடகு வைத்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. இதனால் அதே கம்பெனியில் வேலை பார்க்கும் மகேஷ்குமார் என்பவர் சசிக்குமாரை "கேமரா திருடன்" என்று சொல்லி கேமராமேன்களுக்கு என்று தனியாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் விருகம்பாக்கம் ஸ்டேஷனிலும் சசிகுமார் புகார் அளிக்கப்பட, அதன்பேரில் போலீசாரும் சசிகுமாரை கூப்பிட்டு விசாரித்தனர். இதுதான் சசிகுமாருக்கு பெருத்த அவமானமாகி உள்ளது. இதையே நினைத்துமன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.
அதனால் போன 9 ந்தேதி வெளியே போய்விட்டு வருகிறேன் என்று சொன்னவர்தான் அதற்கு பிறகு வீடு திரும்பவில்லையாம். இதுவரை பெங்களூரில் தங்கி இருந்த சசிகுமார், தற்கொலை செய்யும் முடிவோடுதான், ஜோலார் பேட்டை ஏரிகரைக்கு வந்து அங்கிருந்த மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications