Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிக்ஸர் ஆட்சி".. ஸ்டாலின் மீது எந்த தப்புமில்லை.. காரணமே "அவர்"தான்.. வேலூரில் விந்தியா வீசிய வெடி

வேலூரில் நடைபெற்ற அதிமுக விழாவில் நடிகை விந்தியா திமுகவை குற்றஞ்சாட்டினார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: எழுதாத பேனாவுக்கு 80 கோடி செலவு செய்து சிலை வைக்கிறாங்களே.. பெண்கள் அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதிகளை இந்த ஆட்சி ஏன் தரவில்லை, இனியாவது மக்களை காப்பாற்ற அண்ணன் எடப்பாடி ஆட்சி வரணும் என்று வேண்டிகொள்ளுங்கள்" என்று நடிகை விந்தியா வேலூர் மக்களை கேட்டுக் கொண்டார்.

அதிமுகவின் 51ம் ஆண்டு துவக்க விழா வேலூர் மாவட்டத்தில் நடந்தது.. இந்த விழாவில் பேச்சாளரும், நடிகையுமான விந்தியா கலந்து கொண்டார்..

அப்போது அவர் பேசும்போது, அதிமுக பெருமைகளையும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கட்சி பணிகளையும் புகழ்ந்து பேசினார்.. அத்துடன், திமுகவையும் சரமாரியாக விமர்சித்தார்.. விந்தியா பேசிய வீடியோவை, இணையத்திலும் அதிமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.. அதன் சுருக்கம்தான் இது:

 வெடி வெடி

வெடி வெடி

தமிழக மக்களுக்கு, தீபாவளிக்கு வெடி வெச்சிருக்கு இந்த திமுக.. ஹெல்மெட் போடலை என்றால் 1000 ரூபாய் அபராதம் கட்டணுமாம்.. வண்டிக்கு இன்ஷூரன்ஸ் இவ்லலையென்றால் 5 ஆயிரம் ரூபாய் பைன் போடுவாங்களாம்.. டூவீலரில் ஹெல்மட் அணிந்து இன்ஷூரன்ஸ் பேப்பர்களை வைத்து கொண்டு வண்டி ஓட்டுபவர்கள் யார் என்றால் சாதாரண ஏழை மக்கள்.. சாதாரண மக்களுக்கு தேடி தேடி ஆப்பு வைப்பதுதான் இந்த திமுக.. திரும்புற பக்கமெல்லாம் கன்னி வெடி வெச்சிட்டு இருக்காங்க.. தயவுசெய்து மக்கள் அனைவரும் விழிப்பாக இருந்து, திமுகவின் விளம்பரங்களுக்கு ஏமாறாமல் இருக்க வேண்டும்.. அடுத்த தீபாவளிக்குள்ள நீங்கள் எல்லாரும் சேர்ந்து திமுகவுக்கு வெடி வைக்க வேண்டும்..

கருணாநிதி

கருணாநிதி

ஸ்டாலின் இப்போ எப்படி இருக்கார்? ஒன்றரை வருஷத்தில் எங்க அமைச்சர்களால் நான் தூங்கவே முடியல என்று புலம்புகிறார்.. எங்க அம்மாவின் ஆட்சியில் அறியாமல் தப்பு செய்தால்கூட அம்மா தண்டனை தருவார்கள் என்று பயந்துகொண்டு, எங்கள் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும்தான் தூங்காமல் இருந்தார்கள்.. ஸ்டாலினை சொல்லி தப்பு கிடையாது.. அவரை குறை சொல்வதால் பிரயோஜனம் கிடையாது.. காரணம், அவங்க அப்பா அவருக்கு அவ்வளவுதான் கற்று கொடுத்துள்ளார்..

 கலைஞர் ஆட்சி

கலைஞர் ஆட்சி

"ஐயோ கொல்றாங்களே என்றும், இதுதான் எனக்கு கடைசி தேர்தல்" என்றும் பரிதாப டிராமா போட்டே வாழ்ந்தவர் கருணாநிதி.. இன்னைக்கு அதே டிராமா போடறார் ஸ்டாலின்.. தூங்க முடியவில்லை என்கிறாரே ஆனால், பேசுவதெல்லாம், சிக்ஸர் ஆட்சி, சூப்பர் ஆட்சி, இரண்டாம் கலைஞர் ஆட்சி என்றுதான் இவங்க பேசுவார்கள்.. காஞ்சிபுரம் சிப்காட்டில் செலவு குறைப்பதாக சொல்லி, நடுவில் சுவரே இல்லாமல், 2 டாய்லெட்டுகள் கட்டி வைத்திருக்கிறார்கள்.. இது என்னப்பா மாடல் என்று கேட்டால், இதுதான் திராவிட மாடல் என்கிறார்கள்..

ஆப்பு

ஆப்பு

பொங்கலுக்கு இன்னொரு ஆப்பு தர போறாங்க.. கரண்ட் மீட்டருடன் ஆதார் இணைக்கணுமாம்.. இந்த விஷயத்தை அன்று மத்திய அரசு சொல்லும்போது, எதிர்க்கட்சியில் இருந்த ஸ்டாலின், கத்தினார்.. இன்னைக்கு சைலண்ட்டா அந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.. இந்த திட்டத்தை கொண்டுவந்தால் என்ன சிக்கல் தெரியுமா? அம்மா ஆட்சியில் அறிவித்த 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காமல் போய்விடும்.. இப்படி மக்களுக்கே தெரியாமல் மக்களிடம் இருந்து பணம் பறிபோக போகிறது..

டாய்லெட்டுகள்

டாய்லெட்டுகள்

தமிழகத்தில் 5270 அரசு பள்ளியில் பாத்ரூம் வசதிகள் இல்லை.. இதில் 2 ஆயிரம் பள்ளிகளில், பெண் குழந்தைகள் படிக்கிறார்கள்.. இங்கே கழிப்பிட வசதியை கட்டித்தாருங்கள் என்று கேட்டால் கஜானாவில் பணம் இல்லை, நாங்களே கடனில் இருக்கோம் என்கிறார்கள்.. ஆனால், எழுதாத பேனாவுக்கு 80 கோடி செலவு செய்து சிலை வைக்கிறாங்க.. இனியாவது மக்களை காப்பாற்ற அண்ணன் எடப்பாடி ஆட்சி வரணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+