இரவில் நேரத்தில் பரபரப்பு.. வேலூர் திமுக பொருளாளர் அசோகன் வீட்டில் ஐடி துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் திமுக முக்கிய பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் நமது நாட்டில் சில வாரங்களில் நடக்க உள்ளது. இந்த முறை மொத்தம் ஏழு கட்டமாகத் தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Ahead Lok Sabha election Income Tax officials raids Vellore DMK treasurer

தமிழ்நாட்டில் வழக்கமாக இரண்டாம் கட்டத்தில் தான் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த முறை முதல்கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே திமுகவுக்கு அதிர்ச்சி தரும் விதமாக வேலூரில் முக்கிய பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் திமுக வேலூர் மாநகர பொருளாளர் அசோகன் என்பவரது பிரின்டிங் பிரஸ் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.

திமுக வேலூர் மாநகர பொருளாளரான அசோகன், வேலூர் அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேட்டப்பாளையம் பகுதியில் உள்ள அசோகன் வீட்டில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். மாலை 7-8 மணியளவில் அதிகாரிகள் அங்கே வந்தது சோதனை செய்து வருகிறார்கள்.

சில மணி நேரமாகச் சோதனை தொடரும் நிலையில், இதுவரை எந்தவொரு பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+