ஆம்பூரில் அலறிய மக்கள்.. ஊரையே உலுக்கிய அந்த சத்தம்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன? யாரிந்த நபர்
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதனூர் தேவலாபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக மருமகனே மாமனாரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதுதொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், அந்த பரபரப்பு ஆம்பூரில் நீங்கவில்லை. என்ன நடந்தது?
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது மாதனூர் ஊராட்சி ஒன்றியம்.. இங்குள்ள தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (56).. மாட்டு வண்டி ஓட்டித் தனது குடும்பத்தை மிகவும் சிரமப்பட்டு கவனித்து வந்தார்.

ஆம்பூர் மருமகன்
இவருடைய மகள் பிரீத்தி, அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதான சதீஷ் என்பவரைக் காதலித்து சில வருஷத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சதீஷ் வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 4 மாதக் குழந்தையும் உள்ளனர். ஆனால், இந்தத் தம்பதியின் வாழ்க்கையில் ஆரம்பம் முதலே நிம்மதி இல்லாத சூழலே நீடித்து வந்துள்ளது.
சதீஷுக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 குழந்தைகள் இருந்ததும், அவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்று சதீஷின் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார்.. இத்தனை சிக்கல்களுக்கு நடுவேதான் பிரீத்தி அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தார்.
தம்பதி தகராறு
பெங்களூரு மற்றும் உள்ளூர் பகுதிகளில் வெல்டிங் வேலைக்குச் சென்று வந்த சதீஷ், நாளடைவில் கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையானார். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் தனது மனைவி பிரீத்தியை அடித்துத் துன்புறுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். கணவனின் கொடுமை தாளாமல், பிரீத்தி தனது 2 குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு தந்தை ரவியின் வீட்டிற்குத் தஞ்சம் புகுந்தார்.
தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனிடமிருந்து நிரந்தரமாக விடுபட நினைத்த பிரீத்தி, சமீபத்தில் சதீஷுக்கு விவாகரத்து கோரி சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி வைத்தார். இந்த நோட்டீஸை பார்த்ததுமே சதீஷ் எரிச்சலும் கோபமும் அடைந்தார்.. அந்த ஆத்திரத்தில்தான், அடிக்கடி மதுபோதையில் மாமனார் வீட்டிற்குச் சென்று பிரீத்தியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மாமனார் மருமகன்
சம்பவத்தன்று வழக்கம்போல போதையில் வந்த சதீஷ், பிரீத்தியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது மகளின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகக் கருதி தந்தை ரவி, சதீஷைத் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் அங்கிருந்து வெளியேறிய சதீஷ், பக்கத்து தெருவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு ஓடினார்..
அங்கு அவர் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மறுபடியும் மாமனார் வீட்டிற்குத் திரும்பினார். கண் இமைக்கும் நேரத்தில் ரவியை நோக்கித் துப்பாக்கியால் சுட, குண்டு பாய்ந்த ரவி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
திருப்பத்தூர் - துப்பாக்கி சத்தம்
துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மயங்கிய நிலையில் இருந்த ரவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ரவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் தப்பியோடிய சதீஷை பிடிக்கதேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் மீது போலீசார் மெத்தனம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக விரோதச் செயல்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications