ஆம்பூர் கலவர கேஸில் 161 பேருக்கு விடுதலை.. திருப்பத்தூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு.. பரபரக்கும் வேலூர்
வேலூர்: ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு இன்று அதாவது ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி, ஆம்பூர் கலவர வழக்கில் 129 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. கடந்த 2015ல் ஆம்பூரில் நடந்த கலவர வழக்கில் 191 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 161 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்த தம்பதி பழனி - பவித்ரா.. பள்ளிகொண்டாவில் தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2015ல் 25 வயதான பவித்ரா மாயமாகிவிட்டார்.. அவரை மீட்டு தரக் கோரி பழனி, சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

எனவே இது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவரிடம், கடந்த 2015 ஜூன் 15ம் தேதி பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது பள்ளிகொண்டார் காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், அங்குள்ள போலீஸ் குவார்ட்டஸில் அடைத்து வைத்து விசாரிக்கும்போது, ஷமீல் அகமதுவை கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிருப்தி அறிக்கை
பிறகு போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு உறவினர்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். ஷமீல் அகமது உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சையும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனை 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டு, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முழக்கமிட்டனர்.. இதனால் இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உட்பட7 பேர் மீது வழக்கு பதிவானது.
ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையானது திருப்தியை தரவில்லை என்று மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது. ஷமில்அகமது மரணம் தொடர்பாக கடந்த, 2015 ஜூன் 27ம் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் இறங்கினார்கள்..
கலவரமாக மாறிய போராட்டம்
இந்த போராட்டத்தில் அந்த வழியாக வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் மற்றும் வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.. இந்த தாக்குதலில் பல வாகனங்கள் சேதமடைந்தன.. பஸ்ஸில் பயணிகளும் காயமடைந்தனர். ஓடும் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு டிரைவர்களும் தாக்கப்பட்டனர்.. இதுவே கலவரமாக மாறியது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்ட காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது, கலவரக்காரர்கள் காவலர்களை நோக்கி கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் எஸ்பி செந்தில்குமாரி மீது கற்கள் வீசப்பட்டதால் அவர் லேசாக காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குறைந்தளவு போலீசார்
கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதில், 15 பெண் காவலர்கள் உட்பட 54 காவலர்கள் படுகாயமடைந்தனர். அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கலவரத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
குறைந்தளவே போலீசார் இருந்ததால் அவர்களும் பின் வாங்க வேண்டிய நிலை உருவானது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் காவலர்கள் திணறினர். இதனால், ஆம்பூர் கலவரம் காரணமாக வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதால் \ பயணிகள் தவித்தனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் நள்ளிரவு 1 மணிவரை நீடித்தது. இதையடுத்து
ஹைகோர்ட் வழக்கு
சுமார் 5 மணி நேரம் கலவரம் நடந்த நிலையில், இதுதொடர்பாக 190க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.. கைதான 118 பேருக்கும் ஹைகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஆனால், கடந்த 10 வருடங்களாகவே இந்த வழக்கு நடந்தது வந்தது.. இந்த வழக்கின் தீர்ப்புதான் இப்போது வழங்கப்படுகிறது.. திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்றே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.. இதனால் திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.
ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர்
ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பத்தூர் நீதிமன்றத்துக்கு வழக்கின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ள தனித்தனி வாகனங்களில் வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் எஸ்.பி மயில்வாகனன் தலைமையில் 1200க்கும் மேற்பட்ட போலீசார் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் குவிக்கப்பட்டனர். பகல் 12 மணிக்கே தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதாவது 28ம் தேதி அறிவிக்கப்படுவதாக நீதிபதி மீனாகுமாரி அறிவித்திருந்தார்..
161 பேர் விடுதலை
அதன்படியே, திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இதில், ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. கடந்த 2015ல் ஆம்பூரில் நடந்த கலவர வழக்கில் 191 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.. இந்த 191 மீதான வழக்குதான் இதுநாள் வரை திருப்பத்தூர் மாவட்ட தன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. இதில், 161 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு என்பதால், திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்பட்ட நிலையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications