வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டுபாக்கூர் சாமியாரைப் பிடிக்க வந்த இடத்தில் கும்மாங்குத்து வாங்கிய போலீ்ஸ்.. வேலூரில் கலகல!

Google Oneindia Tamil News

Recommended Video

    திருடனை பிடிக்க வந்த இடத்தில் பொதுமக்களிடம் அடிவாங்கிய போலீஸ்- வீடியோ

    வேலூர்: இரட்டை வேட ஆசாமியை பிடிக்க வந்த இடத்தில் திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் போலீஸாரை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வேலூர் மாவட்டம் ரத்தினகிரியை அடுத்து உள்ளது மேலக்குப்பம். மலைகிராமமான இந்த இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருபவர் ராமகிருஷ்ண ஆச்சார்யா.

    இவர் ஆந்திர மாநில அனந்தபுரம் மாவட்டம், தர்மாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தர்மாவரம் கிராம எல்லைக்குள்பட்ட பல பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது போன்ற பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

    [வாழ்ந்தால் அது "சிம்பு"வுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி!]

    தமிழகத்துக்கு வந்தார்

    தமிழகத்துக்கு வந்தார்

    இந்த குற்றச்சாட்டுகளில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் ஆச்சார்யா தமிழகத்துக்கு வந்துவிட்டார். அவ்வப்போது ஆந்திரத்துக்கு செல்வதும் அங்கு திருடிவிட்டு வேலூரில் ஜோதிடம் சொல்வதுமாக இருந்தார்.

    செல்போன் சிக்னல்

    செல்போன் சிக்னல்

    சில மாதங்களுக்கு முன்பு அவரது செல்போன் எண் மூலம் அவரை பிடிக்கும் முயற்சியில் ஆந்திர போலீஸார் இறங்கினர். இந்நிலையில் மேலக்குப்பத்தில் அவரது செல்போன் சிக்னல் இருப்பதை ஆந்திர போலீஸார் அறிந்தனர்.

    மாறுவேடத்தில்

    மாறுவேடத்தில்

    இதையடுத்து வேலூரில் உள்ள ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் நண்பரின் உதவியுடன் அவரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் ரத்தினகிரி போலீஸ் உதவியுடன் மடக்கி பிடித்தனர். இதனிடையே ராமகிருஷ்ணாவை பிடிக்க போலீஸார் மாறுவேடத்தில் கிராமத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர்.

    ரத்தினகிரி போலீஸ் வருகை

    ரத்தினகிரி போலீஸ் வருகை

    திருடர்கள்தான் நோட்டமிடுகின்றனர் என நினைத்த பொதுமக்கள் கடுமையாக தாக்கி அவர்களை கடப்பாரையால் குத்த சென்றனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு ரத்தினகிரி போலீஸார் வருகை தந்தனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    அப்போதுதான் தாங்கள் அடித்தது திருடனை அல்ல போலீஸ்காரர்களை என்பது மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Andhra Police gets attack by local people in Vellore while they were in that place in search of thief.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X