வேலூர் அருகே ஆட்டோவில் வந்த பெண்கள்.. பார்த்தது எவ்வளவு பெரிய வேலை தெரியுமா.. நொறுங்கிய பிளான்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களை திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அங்கன்வாடி அமைப்பாளர் ராமவதி (வயது 47) மற்றும் ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த ஜம்ஷிகா (45) ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றியதாக புகார் எழுந்தது. அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இன்றைக்கு பலரது கனவாக உள்ளது. ஆனால் அரசு வேலையில் சேர போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும். பல லட்சம் பேரில் ஒருவருக்கு தான் வேலை கிடைக்கிறது. அதுவும் விடாமுயற்சியும், கடின உழைப்பும், சரியான புத்திசாலித்தனமும், நல்ல படிப்பறிவும் உள்ளவர்களால் மட்டுமே அரசு வேலையில் சேர முடியும் என்கிற நிலை உள்ளது.

அதேநேரம் பலர் என்ன தான் முயற்சித்தாலும் குரூப் 4 தேர்வில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளனர். அதில் சிலர் குறுக்குவழியில் அரசு வேலையில் சேர விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றுவது நடக்கிறது. அடிக்கடி இப்படி ஏமாறுவது நடக்கிறது. அதேபோல் போக்குவரத்து கழக வேலை, அங்கன்வாடி வேலை, ரேஷன் கடை வேலை போன்ற நேர்முகத் தேர்வு அடிப்படையிலான வேலையில் லஞ்சம் கேட்பதும் அடிக்கடி நடக்கிறது. சிலர் இப்படி ஏமாற்றுகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்ற முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைதாகி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை பலர் சமர்பித்துள்ளனர். இதற்காக விண்ணப்பித்தவர்களை திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அங்கன்வாடி அமைப்பாளர் ராமவதி (வயது 47) மற்றும் ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த ஜம்ஷிகா (45) ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வேலை வாங்கித்தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆலங்காயம் பகுதியை சேர்ந்த அப்துல் ஷாஹித் என்பவரிடம் ராமவதி, மற்றும் ஜம்ஷிகா ஆகியோர் செல்போனில் பேசி அவரது மனைவிக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் முன் பணம் கேட்டார்களாம். இதைத்தொடர்ந்து பணம் தருவதாகக்கூறி குறிப்பிட்ட இடத்துக்கு அவர்களை வரவழைத்தனர். அங்கு ஆட்டோவில் வந்த அவர்கள் இருவரையும் பிடித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications