குளிக்கும்போது வீடியோ.. "ப்ளீஸ் டெலிட் செய்துடு".. காமுகர்களிடம் கதறிய மாணவி.. தீக்குளித்து மரணம்

15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: குளிக்கும்போது திருட்டுத்தனமாக காமுகர்கள் வீடியோ எடுத்ததால், 15 வயது பிஞ்சு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து ஆபத்தான முறையில் சிகிச்சையில் இருந்தார்.. தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமியை காப்பாற்ற முடியாத நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது வேலூர் மாவட்டத்தையே உறைய வைத்துள்ளது.

வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி பென்னாத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லை.
சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் இவர் குளித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளி ஆகாஷ் என்கிற பூனை கண்ணன் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.. வீடியோ எடுப்பதற்காக, பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவர்களையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

blackmail video: 15 year old girl died in vellore

பிறகு வீடியோவை மாணவிக்கு அனுப்பியதுடன், தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தொல்லை தந்துள்ளனர். இதை பார்த்து திடுக்கிட்ட மாணவி உடனடியாக அந்த வீடியோவை டெலிட் செய்தார்... மீண்டும் வீடியாவை அனுப்பி கொண்டே இருக்கவும், அவர்களிடம் அதை டெலிட் செய்துவிடும்படி கெஞ்சி உள்ளார். ஒரு கட்டத்தில் மனம் நொந்த மாணவி, மண்ணெண்ணைய் எடுத்து உடம்பில் ஊற்றி கொண்டு தீக்குளித்தார்.

உடம்பெல்லாம் பற்றி எரிந்து மாணவி அலறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. அப்போது அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது.. ஆனால் உடல்நிலை மோசமாக உள்ளதாம். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு வலைவீசி பிடித்ததில் பூனை கண்ணன் உட்பட பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் என 3 பேரையுமே போலீசார் பிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் சிகிச்சையில் இருந்தபோது சிறுமி வாக்குமூலம் தந்திருந்தார். அதில், "அந்த 3 பேரால்தான் நான் தீக்குளிச்சிட்டேன்.. உன்னையும் உன் சித்தப்பனையும் பழி வாங்க தான், வீடியோ எடுத்தோம்.. அந்த வீடியோவை உன் சித்தப்பா நம்பருக்கு அனுப்பி இருக்கேன்.. அதை பார்த்துட்டு எங்க லைனுக்கு வா"ன்னு சொன்னாங்க.

நான் பயந்துபோய் வாட்ஸ்அப் எடுத்து பார்த்தால் குளிக்கிற வீடியோ இருந்தது.. நான் உடனே அவங்களுக்கு போன் பண்ணி டெலிட் பண்ண சொன்னேன்.. ஆனால், அதுக்கு அவனுங்க 5000 ரூபாய் கேட்டானுங்க... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.. உடனே சித்திகிட்ட சொன்னேன்.. சித்திதான் போலீஸ்கிட்ட போலாம்னு சொன்னாங்க. அப்போ அவனுங்க திரும்பவும் போன் பண்ணானுங்க.

வேலூர் கோட்டைக்கு வர சொன்னாங்க. நான் மாட்டேன்னு சொன்னேன், உடனே ஏரிக்கரை மலைக்கு வர சொன்னாங்க. நானும் ஏரிக்கரை மலைக்கு போனேன்.. 3 பேரும் இருந்தாங்க. நான் அதில ஒருத்தன் சட்டையை பிடிச்சு சண்டை போட்டேன்.. அவன் செல்லை புடுங்கி வீடியோவை டெலிட் பண்ணேன்.. அதுக்குள்ள மத்த 2பேரும் ஓடிட்டாங்க.

அந்த வீடியோவுல நிறைய பேர் குளிக்கிற வீடியோ இருந்தது.. என் பாட்டி குளிக்கிற வீடியோ கூட இருந்தது. அதையெல்லாம் டெலிட் பண்ணிட்டே இருந்தேன்.. அப்பதான் ஒருத்தன் என் தலையில கல்லை தூக்கி போட்டுட்டு ஓடினான்.. வலி தாங்க முடியாம நான் வீட்டுக்கு வந்து, மண்ணெண்ணையை ஊத்திக்கிட்டேன்" என்றார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. சிறுமிக்கு 95 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.. பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் சொல்லி இருந்தனர்.. தனக்கு என்ன நடந்தது என்பதை வீட்டில் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதிவைத்துவிட்டுதான் மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.. இந்த குழந்தை மீண்டும் பிழைத்து வந்துவிட வேண்டுமே என்பது தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.. ஆனால் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+