தேர்தலிலும் ஓயாத சர்ச்சை.. வேலூர் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு! ஏன் தெரியுமா?
வேலூர்: வரும் லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடும் நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதி வேட்பாளராக அவர் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். மன்சூர் அலிகான் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. இதன்மூலம் வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் மன்சூர் அலிகான் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.மேலும் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் முன்னதாகவே மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பிரசார கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு முறையான அனுமதி பெறவேண்டாம். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை என்பது எடுக்கப்படும்.
இந்நிலையில் தான் வேலூர் பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றிய சுவர்களில் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தொடர்பான விளம்பரங்கள் மற்றும் கட்சியின் அடையாளம் ஓவியமாக பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பொய்கை கிராம நிர்வா கஅலுவலர் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வேலூர் வேட்பாளராக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தான் நடிகை திரிஷா பற்றி கூறிய கருத்து சர்ச்சையானது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபட்டார். இத்தகைய சூழலில் தான் அரசியல் என்ட்ரியான மன்சூர் அலிகான் மீது மீண்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications