வேலூர் அருகே காதல் திருமணம் நடந்த 3 மாதத்தில்.. சின்ன பிரச்சனையால் 2 பேருமே இன்று உயிருடன் இல்லை
வேலூர்: வேலூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வீட்டில் நடந்த சிறிய பிரச்சனையில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் வேதனை அடைந்த கணவன், மருத்துவமனையில் திராவகத்தை குடித்து உயிரை விட்டுள்ளார். சிறிய பிரச்சனைக்காக அடுத்தடுத்து மனைவி மற்றும் கணவன் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் திப்பசமுத்திரம் கீழ் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ரவி என்பவர் ஓய்வு பெற்ற டாஸ்மாக் ஊழியர் ஆவார். இவரது மகன் பூவரசன் (வயது 26) அந்த பகுதியில் டிரைவராக வேலை செய்து வந்தார். பூவரசனுக்கும் கழனிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் ஐஸ்வர்யா (25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டினார்கள். இதனால் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பூவரசன் ஐஸ்வர்யா தம்பதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆகி வெறும் 3 மாதம் கூட முடியாத நிலையில், இவர்கள் வாழ்க்கையில் பெரிய சோகம் நடந்துள்ளது. ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள தெரியாமல் உயிரையே விட்டுள்ளனர்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பூவரசனின் பெற்றோர் கடந்த ஞாயிறு அன்று வெளியூருக்கு சென்றுள்ளார்கள். அப்போது பூவரசன் ஐஸ்வர்யா தம்பதி வீட்டில் இருந்தனர். அப்போது ஐஸ்வர்யா தெரிந்தவர்களின் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியே அழைத்துச் செல்லுமாறு பூவரசனை கேட்டுள்ளார். அதற்கு பூவரசன் மறுத்துவிட்டு வெளியில் சென்று விட்டாராம்.
சிறிது நேரம் கழித்து பூவரசன் வீட்டுக்கு வந்தபோது ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பூவரசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஐஸ்வர்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே ஐஸ்வர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் காதல் மனைவி தற்கொலை செய்தது,. பூவரசனை மிகவும் பாதித்திருக்கிறது. மருத்துவமனையில் கதறி அழுத அவரை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்ற முயற்சித்தார்கள். இந்த நிலையில், நேற்று அதிகாலை தனது மனைவி ஐஸ்வர்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை அருகே சுற்றி சுற்றி வந்த பூவரசன் உறவினர்களிடம் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். கழிவறைக்கு சென்ற பூவரசன் அங்கிருந்த கழிவறையை சுத்தம் செய்யும் திராவகத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
மக்களே கழிவறையில் உள்ள ஆசிட் மோசமானது யாரும் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.. அதேபோல் சிறிய பிரச்சனைகளை கையாள தெரியாமல் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் பிரச்சனைகளை கையாள தெரியாத நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம்.. சிறுவயது முதலே பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்காதது தான். ஏமாற்றங்களை தாங்கவும், ஏமாற்றங்களை எதிர்கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதைவிட்டு விட்டு பிரச்சனைகள் எதுவுமே தன் பிள்ளைக்கு வந்துவிடக்கூடாது என பெற்றோர்கள் வளர்ப்பது அவர்களுக்கே பின்னாளில் பெரிய ஆபத்தாக முடியும்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications