கதிர் ஆனந்த் சொத்துக்கள் இவ்வளவுதான்.. கையிருப்பும் இதுவே.. இதோ சொத்துக் கணக்கு!
கதிர்ஆனந்த் தன்னுடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார்
வேலூர்: கதிர்ஆனந்த் ஆபீஸ், காலேஜ்களில் கத்தை கத்தையாக, மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளி கொண்டு போனார்கள் அதிகாரிகள் என்று செய்தி வந்தநிலையில், தனக்கு இவ்வளவுதான் சொத்து இருக்கிறது என்று மொத்த கணக்கையும் தெரிவித்துள்ளார் கதிர்ஆனந்த்!
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்குகிறார் கதிர் ஆனந்த். தன் பேரிலும், மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோரது பெயர்களிலும் மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னிடம் கையிருப்பாக பணம் ரூ.19 லட்சத்து 30 ஆயிரமும், சங்கீதாவுக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879 ரூபாயும் உள்ளதாக கூறியுள்ளார்.

ரூ.26 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரத்து 618 மதிப்பு அசையா சொத்துக்கள் தன் பெயரிலும், ரூ.14 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 661 மதிப்பு அசையா சொத்துக்கள் மனைவி பெயரிலும் இருப்பதாக கூறியுள்ளார். மனைவி பெயரில் மட்டும் ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 மதிப்பிலான கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், மொத்தம் சொத்து, ரூ.57 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரத்து 163 மதிப்பில் இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த 3 மாசத்தில் ரூ.1 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்து 288 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications