வேலூரில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பறந்த மேஜர் உத்தரவு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல், ரெஸ்டாரென்ட், கோழிப்பண்ணைகள், மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், முடிதிருத்தும் நிலையங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான தொழிலாளர்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை வலைத்தளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல், ரெஸ்டாரென்ட், கோழிப்பண்ணைகள், மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், முடிதிருத்தும் நிலையங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான தொழிலாளர்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் பணிபுரிகின்றனர்.

அதேபோன்று சுயத்தொழில் செய்பவர்கள், பாதுகாவலராக பணிபுரிபவர்கள், வீட்டுவேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் துறையின் http://labour.tn.gov.in/ism/ என்ற இணையதளத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்தி வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் எண், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற முழு விவரத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வெளிமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உரிமம் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்" இவ்வாறு கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் எம்எல்ஏ ஒரு முறை பேசும்போது, "வெளிமாநிலத் தொழிலாளர்களால் தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் என்ன பணிக்காக வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், எந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, வெளிமாநிலத்தவர் வருகையை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார். அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் பேசும்போது, "வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அப்போது பதில் அளித்து பேசுகையில், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்வதற்கான போர்ட்டல்கள் உள்ளன. அதன் வழியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகம், உதவி ஆணையர் அலுவலகங்களிலும் வெளி மாநில தொழிலாளர் வருகை பதிவு செய்யப்படுகிறது. நகைக்கடை மற்றும் மளிகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோரும், தங்கள் கடைகளில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படும் வெளி மாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்துக்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து அரசு சார்பில் பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications