Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரில் மாட்டிய பிரபலம்.. வேலூரில் அமைச்சரே எதிர்பார்க்கல.. கன்னிகாபுரத்தில் ஒரே பரபரப்பு.. என்னவாம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திமுகவா? பாஜகவா? அதிமுகவா? யார் வெற்றி பெற போவது என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது வேலூர் மக்களவை தொகுதி. இந்நிலையில், ஒரு பரபரப்பு சம்பவம் நடந்து வேலூரையே அதிர வைத்து வருகிறது.

கடந்த முறை தேர்தலின்போது, அதிமுகவும், பாஜகவும் ஒரே அணியிலிருந்து போட்டியிட்டன.. அப்போது தேர்தல் களத்தில் பிரதமர் மோடி எதிர்ப்பு அலையே, திமுகவின் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்தன என்பதற்கு, வேலூர் தொகுதியே மிகச்சிறந்த உதாரணமாக விளங்கியது.

Did Kannigapuram People oppose DMK Vellore Candidate Kathir Anand Minister Durai Murugan what happened actually

கதிர் ஆனந்த்: திமுகவை பொறுத்தவரை, இப்போதும் 2வது முறையாக கதிர்ஆனந்துக்கு வாய்ப்பு தந்துள்ளது.. லோக்கல் பாலிட்டிக்ஸ் வேலூர் தொகுதியில் பீறிட்டு எழுந்தாலும், அனைத்தையும் சமாளித்து, தன்னுடைய மகனுக்கு சீட் வாங்கி தந்துள்ளார் மூத்த தலைவர் துரைமுருகன். தன்னுடைய மொத்த அரசியல் வியூகங்களையும், இந்த தேர்தலில் வெளிப்படுத்தியும் வருகிறார்.

இயல்பாகவே, துரைமுருகன் உணர்ச்சிவசப்படக்கூடியவர்.. அழுகையோ, சிரிப்போ, கோபமோ, எதுவானாலும் உடனுக்குடன் வெளிப்படுத்தக்கூடியவர்.. அதிலும், கடந்த முறை, தன்னுடைய மகன் தேர்தல் களத்தில் முதல்முறையாக நிற்கிறார் என்றாலே, துரைமுருகன் சற்று கூடுதலாகவே எமோஷனல் ஆகிவிட்டார்.

வேட்பாளர்: வேலூர் மக்களிடம் அப்போது கண்ணீர்விட்டு கதறி அழுதார் துரைமுருகன். "வேலூர் தொகுதி மக்களுக்கு என் மகனை தத்துக்கொடுக்கிறேன். இனிமேல் அவர், அவர், உங்கள் வீட்டுப் பிள்ளை" என்றார்.

இந்த முறை வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும், மறுபடியும் கண்ணீர் விட்டு அழுதார் துரைமுருகன்.. "மிசாவில் என் மகனை தொடக்கூட முடியாமல் தடுத்துவிட்டார்கள்" என்று மனமுருகி பேசினார்.. இதற்கெல்லாம் காரணம், கடந்தமுறை தேர்தலில் தனக்கும், தன்னுடைய மகனுக்கும் ஏற்பட்ட நிலை இந்த தேர்தலில் வரக்கூடாது என்பதில் துரைமுருகன் உறுதியாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

உரிமைத்தொகை: தன்னுடைய மகனின் வெற்றிக்காக துரைமுருகன் இப்படியெல்லாம் பாடுபட்டு வரும்போது, அனைத்து வியூகங்களும் அவ்வப்போது சிதறிவிடுகிறது. இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, மகளிர் உரிமைத்தொகை குறித்து கதிர் ஆனந்த் பேசியிருந்தது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

வாக்கு சேகரிக்கும் இடத்திலிருந்த பெண்களை பார்த்து, "மேடையில் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பெண்களின் முகம் எல்லாம் பளபளவென்று தெரிகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் செலுத்தியது வந்துவிட்டதா" என்று கேட்டார். உடனே இதை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்திருந்தன.

கன்னிகாபுரம்: இப்போது இன்னொரு சம்பவம் வேலூர் தொகுதியில் நடந்துள்ளது.. அனைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்கை ராமாபுரம் கன்னிகாபுரம் பகுதிகளில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்காக, வாக்கு சேகரிக்க சென்றிருக்கிறார் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அவருடன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்டோரும் சென்றனர்.'

ஆனால் கிராம மக்கள் சாலையின் குறுக்கே கட்டைகளை போட்டு அமைச்சர் உள்ளிட்டவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினார்கள் கடந்த 8 வருடங்களாகவே, கன்னிகாபுரம் பகுதிக்கு அரசின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லையே ஏன்? சாலை அமைக்க பல முறை கோரிக்கை வைத்தும் சரி செய்து தராமல் எங்களை அலைகழித்துவிட்டீர்களே ஏன்? இந்த ரோட்டில் வராதீங்க.. பழுதடைந்த ரோடு வழியாக வாருங்கள்.. இனிமேல் இந்த பக்கம் வர கூடாது" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்கள்..

சமாதானம்: நடுவழியிலேயே தடுத்து நிறுத்தியதுடன் ஊருக்குள் வர கூடாது என்றும் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால், அமைச்சர் உட்பட பலரும் செய்வதறியாது திகைத்துவிட்டனர்.. அதனால், அமைச்சர் உள்ளிட்டோர் காரை விட்டு கீழே இறங்காமல் காரிலேயே காத்திருந்தனர்.. எவ்வளவோ சமாதானம் செய்தும் கிராம மக்கள் சமாதானம் அடையவில்லை. அதனால், வேறு வழியின்றி ஊருக்குள் செல்லாமல் அமைச்சர் உள்ளிட்டோர் திரும்பி சென்றனர்..

கிளம்பி செல்வதற்கு முன்பு அமைச்சர் அவர்களிடம் வந்து, "இன்னும் 6 மாதகாலத்திற்குள் கிராமத்திற்கு தேவையானவற்றை செய்து தருகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்

கொதிப்பு: பொதுமக்களின் இந்த அளவுக்கு கொதிப்புக்கு காரணம், இவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும், திமுக ஒன்றிய செயலாளர் குமார பாண்டியன் என்பவர் செய்யாமல் தடுத்து வருகிறாராம்.. மாவட்ட திமுகவில் பொறுப்பில் உள்ளவர்களும், இவரை கண்டிப்பதும் கிடையாதாம். அதனால்தான், அமைச்சர் என்றும் பாராமல் எதிர்ப்பை தெரிவித்ததாக சொல்கிறார்கள்.

எனினும், அமைச்சர், எம்எல்ஏக்களை ஊருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார்கள்.. ஆனால், பொதுமக்கள் கொஞ்சமும் அசரவில்லை.. அமைச்சர் உள்ளிட்டோர் அங்கிருந்து கிளம்பி செல்லும்வரை அவர்களின் கண்ணில் ஆக்ரோஷம் கொந்தளித்து கிடந்தது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+