வேலூர் கோட்டையை கைப்பற்றினார் "DMK".. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பலம் 38-ஆக உயர்வு
Recommended Video
வேலூர்: வேலூரில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை அடுத்து நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பிக்களின் பலம் 38-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 38 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வேலூரில் தேர்தலுக்கு முன்பாக திமுக பிரமுகர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதால் அந்த தொகுதிக்கு தேர்தல் ரத்தானது.

5-ஆம் தேதி தேர்தல்
இதையடுத்து மற்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் தேனி எம்பியாக ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் வேலூருக்கு எம்பி தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு நடந்தது.

முன்னிலை
இதில் திமுகவின் கதிர் ஆனந்த், அதிமுகவின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்திலிருந்து ஏசி சண்முகமும், கதிர் ஆனந்தும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.

எத்தனை வாக்குகள்
இந்த நிலை மாறி கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு திமுக வெற்றி பெற்றது. திமுகவின் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளையும், அதிமுகவின் ஏசி சண்முகம் 4,77,199 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 26,995 வாக்குகளையும் பெற்றனர்.

யார் வெற்றி
இந்த நிலையில் கதிர் ஆனந்த், ஏசி சண்முகத்தைக் காட்டிலும் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் 38 ஆக உயர்ந்துள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications