அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்?
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியை மையப்படுத்தி திமுக மேல் மட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. காட்பாடியின் அசைக்க முடியாத எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சரிகளில் ஒருவருமான துரைமுருகன்.
அவரது உடல் நலம் ஆரோக்கிய த்தை முன்னிறுத்தி தேர்தல் அரசியலில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். அதனால் இந்த முறை அவருக்கு சீட் இல்லை.

இதனை ஏற்கனவே, சபரீசன் மூலமாக துரைமுருகனிடம் தெரிவிக்கப்பட்டது. அதிலிருந்தே அவர் அப்-செட் ! துரைமுருகனை போல, மூத்த தலைவர்கள் பலரையும் இந்த தேர்தலை மையப்படுத்தி கட்டம் கட்ட தீர்மானித்துள்ளது தலைமை.
காட்பாடியை மையப்படுத்தி மீண்டும் அறிவுறுத்திய திமுக தலைமை,
இந்த நிலையில், கடந்த வாரம் காட்பாடியை மையப்படுத்தி மீண்டும் அறிவுறுத்திய திமுக தலைமை, ''அண்ணே, உங்கள் உடல் நலம் கருதிதான் இந்த முடிவை எடுத்திருக்கி றோம். தேர்தலில் போட்டியிட வேண்டாம். உங்களுக்குப்பதிலாக வேறு ஒருவரை சொல்லுங்கள்.
அவருக்கு சீட் தருகிறோம் '' என அழுத்தமாக சொல்ல, ''இந்த ஒருமுறை மட்டும் வாய்ப்புக் கொடுங்கள். அதுவே போதும். வேறு எதுவும் வேண்டாம் '' என்று துரைமுருகன் மல்லுக்கட்டிய நிலையிலும் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதியும் சமீபத்தில் சந்தித்து, விட்டுக்கொடுங்கள் அண்ணே என்று துரைமுருகனிடம் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பத்தில் ஆலோசித்திருக்கிறார் துரைமுருகன்
இந்த நிலையில், தலைமையின் முடிவு குறித்து தனது குடும்பத்தில் ஆலோசித்திருக்கிறார் துரைமுருகன். அப்போது, அவரது மருமகள், நீங்கள் சொல்லும் நபருக்குத்தான் சீட் எனில் என் பெயரை முன்மொழியுங் கள் என சொல்லியிருக்கிறார்.
ஆனால், மருமகளுக்கு சீட் வாங்கிக் கொடுக்க மாமியாருக்கு அதாவது துரைமுருகன் மனைவிக்கு விருப்பம் இல்லை. அதனால், மருமகளுக்கு கூடாது என துரைமுருகனுக்கு நெருக்கடித் தரப்படுகிறது.
மன இறுக்கத்தில் இருந்து வருகிறார் துரை முருகன்.
இதனால், என்ன செய்வதென தெரியாமல் மன இறுக்கத்தில் இருந்து வருகிறார் துரை முருகன். இதனையெல்லாம் அறிந்த துரைமுருகனின் முன்னாள் ஆதரவாளரும், அமைச்சர் ஏ.வ. வேலுவின் தற்போதைய ஆதரவாளருமான எம்.எல்.ஏ.நந்தகுமார், காட்பாடியை எனக்கு வாங்கித் தாருங்கள் என வேலுவிடம் வற்புறுத்தி வருகிறார்' என்கிறார்கள் திமுகவினர்.
இதற்கிடையே, திமுகவில் புதிய வரவாக வந்துள்ள தேமுதிக, காட்பாடியை கேட்டு அழுத்தம் தருகிறது. தேமுதிகவின் விருப்பப்பட்டியலில் காட்பாடிக்கு முதல் இடம். துரைமுருகனுக்கு எதிரான அரசியலை சீக்ரெட்டாக கட்டமைத்து வரும் எ.வ.வேலு வின் தூண்டுதலில் தான் காட்பாடியை கேட்டு தேமுதிக பிரேமலதா அழுத்தம் தருகிறார்.
அரசியல் சேப்டருக்கு முற்றுப் புள்ளி
இந்த தேர்தலிலிருந்து துரைமுருகனின் அரசியல் சேப்டருக்கு முற்றுப் புள்ளி விழவேண்டும் என்கிற திட்டத்தில் பல காய்களை நகர்த்தி வருகிறார் வேலு. இதன் தொடர்ச்சியாகத்தான் துரைமுருகனிடமிருந்து காட்பாடியை பறித்து தேமுதிகவுக்கு கொடுக்க திமுக தலைமை நினைக்கிறது என்கிற பின்னணி தகவல் களும் கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications