வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரேயடியாக அடிச்சி தூக்கி மேல வந்த திமுக.. கைவிடாத நகர்ப்புற வாக்கு.. கதிர் "ஆனந்தம்"!

நகர்ப்புற வாக்குகள் திமுகவுக்கு அதிகம் கிடைத்துள்ளன

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : திடீரென முன்னிலையில் வந்த கதிர் ஆனந்த்..அதிமுகவுக்கு பின்னடைவு- வீடியோ

    சென்னை: வாக்கு எண்ண ஆரம்பித்த 3 மணி நேரம் மண்டை காய விட்டு விட்டார் ஏசி சண்முகம். அதன்பிறகுதான் கதிர் ஆனந்த் முகத்தில் மகிழ்ச்சியே திரும்பியது. திமுகவை நகர்ப்புற வாக்காளர்கள் கைவிடவில்லை.. வேலூர் திமுக பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.

    போன 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடந்து, இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலைல ஓட்டு எண்ண ஆரம்பிச்சதில் இருந்தே திமுக, அதிமுக என மாறி மாறி முன்னிலைக்கு வந்து வந்து போயின.

    ஒரு சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்தார் என்றால், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதனால் எந்த ஒரு மனநிலைமைக்கும் இப்போது வரை நம்மால் வர முடியவில்லை.

    வாக்கு சதவீதம்

    வாக்கு சதவீதம்

    இதற்கு நடுவில் நாம் தமிழர் உள்ளே புகுந்து டஃப் கொடுத்து, அதிமுக, திமுகவுக்கு கொஞ்ச நேரம் அள்ளு கிளப்பியது. ஆனால் திடீரென்று திமுகவின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

    நகர்ப்புறம்

    நகர்ப்புறம்

    எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு கிராமப்புற ஓட்டுக்கள் என்பது மாற்ற முடியாத ஒன்று. அதேபோல, திமுகவுக்கு எப்போதுமே நகர்ப்புற ஓட்டுக்கள்தான் கை கொடுத்து கொண்டே இருக்கும். இந்த முறையும் அப்படித்தான் வேலூர் தொகுதியில் தூக்கி நிறுத்தி உள்ளது.

    உயர்வு

    உயர்வு

    குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட நகரங்களில் திமுகவுக்கு சாதகமான சூழல் எப்போதுமே உண்டு. இதில் வன்னியர்கள், தலித்கள், இஸ்லாமியர்கள் என்று ஒதுக்கி பிரித்து பார்த்துவிட முடியாது. மொத்தமாக நகர்ப்புற வாக்கு எண்ணிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    அதிலும் நகர்ப்புற ஓட்டு எண்ண ஆரம்பித்ததும் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசம் கொஞ்ச நேரத்திலேயே விழுந்தது. இது ரொம்ப பெரிய விஷயம் ஆகும். அந்த வகையில் திமுகவை இப்போதும் நகர்ப்புறவாசிகள் கைவிடவில்லை என்பது வேலூரில் நிரூபணமாகி உள்ளது.வேலூர் மாநகராட்சி வாக்குகள் எண்ணப்பட்ட போதும், கதிர் ஆனந்த்துக்கு மேலும் சாதகமான நிலை உருவானதுதான் ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

    English summary
    vellore lok sabha election. vote result live update: DMK leading in Vellore constitutions urban areas
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X