Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நானா சங்கி? பொதுமேடையில் காலணியை கழற்றி காட்டிய சீமான் மீது வேலூர் போலீசில் திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திமுகவினரே உண்மையான சங்கி என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமேடையில் காலணியை கழற்றி காண்பித்து எச்சரித்தார். திமுகவினரை காலணியால் அடிப்பேன் என்கிற வகையில் பேசியதால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் போலீசில் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர்.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அப்துல் ரவூப் தீக்குளித்தார். அப்துல் ரவூப்பின் 26-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி சென்னை அம்பத்தூரில் நடத்தியது.

DMK lodges Complaint against Naam Tamilar chief Seeman

இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், யூடியூபர் மாரிதாஸ் ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுகவினரே உண்மையான சங்கிகள் (இந்துத்துவவாதிகள்) எனவும் விமர்சித்தார். அப்போது திடீரென தமது காலில் இருந்த காலணியை கழற்றி காண்பித்தார். அதாவது தம்மை சங்கி என விமர்சித்தால் திமுகவினரை காலணியால் அடிப்பேன் என்கிற வகையில் சீமான் பேசினார். ஒரு கட்சியின் தலைவர், பொதுமேடையில் இப்படி காலணியை கழற்றி காட்டி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சீமானின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

Recommended Video

    Seeman கோபம்! Maridas-க்கு ஆதரவாக பேசினா சங்கியா? | Oneindia Tamil

    இந்நிலையில் வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம் தலைமையில் திமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவை நேரில் சந்தித்து சீமான் மீது புகார் அளித்தனர். அந்த புகாரில், தமிழக அரசையும் திமுகவையும் திமுக தொண்டர்களையும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிய போது காலணியால் அடிப்பேன் என பேசினார். தொடர்ந்து திமுக மீது அவதூறுகளையும் அரசியல் அநாகரீகத்தையும் அரங்கேற்றி வரும் சீமானை கைது செய்ய வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி இருந்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+