கோடிக்கணக்கில் சொத்து இருந்து என்ன பயன்? ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமாக கார் கூட இல்லையாமே!
வேலூர்: வேலூரில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் பாஜக சார்பில் புதிய நீதி கட்சியின் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் டாக்டர் பசுபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஏ.சி.சண்முகமும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பாக ரூ 152 கோடி பதிவு செய்துள்ளார்.
ஏ.சி.சண்முகத்தின் மனைவி பெயர் லலிதா லட்சுமி. ஏ.சி.சண்முகம் கையிருப்பு தொகையாக ரூ 55,601 ரூபாயும், லலிதா லட்சுமியிடம் ரூ 85 ஆயிரம் ரூபாயும் உள்ளது. வங்கிக் கணக்குகளில் ஏ.சி.சண்முகத்திற்கு ரூ 94. 64 லட்சமும் லலிதா லட்சுமிக்கு ரூ 1.17 கோடியும் உள்ளது. ஏ.சி.சண்முகத்திடம் 2,105 கிராம் தங்கம், 20 கிலோ வெள்ளியும் லலிதா லட்சுமியிடம் 3,837 கிராம் தங்கமும் ஒரு கிலோ வெள்ளியும் உள்ளது.
பல்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை, வைப்புத் தொகை, பங்கு முதலீடு, நகை என்று அசையும் சொத்துகளாக ஏ.சி.சண்முகத்திடம் ரூ 36 கோடியும் லலிதா லட்சுமியிடம் ரூ 37 கோடியும் உள்ளது. வேலூர், ஆரணி, பெங்களூர்,சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலங்கள், காலிமனைகள், கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று ஏ.சி.சண்முகம் பெயரில் அசையா சொத்து ரூ 7.43 கோடி மதிப்பிலும், லலிதா லட்சுமியின் பெயரில் ரூ 16.02 கோடியும் அசையா சொத்துகள் உள்ளன.
ஏ.சி.சண்முகத்திற்கு ரூ 17 கோடியே 72 லட்சமும் லலிதாவுக்கு ரூ 11 கோடியே 12 லட்சமும் கடன் உள்ளது. இவர் பெயரிலும் மனைவி பெயரிலும் கார்கள் ஏதும் சொந்தமாக இல்லையாம். ஏ.சி. சண்முகம் பெயரில் 8 அடுக்குமாடி குடியிருப்புகளும் அவருடைய மனைவி பெயரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது ஏ.சி.சண்முகம் தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் ரூ 127 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications