வேலூர் ஆண்ட்டி.. சித்தியுடன் மிஸ்ஸான 17 வயது சிறுவன்.. குடியாத்தம் போலீசுக்கு தலையே சுத்திருச்சாமே
வேலூர்: 22 வயது சித்தியை காணவில்லை.. வேலூர், ஆம்பூர், குடியாத்தம் என ஒட்டுமொத்த போலீசாரும் இந்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து, விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே ஒரு பகுதியை சேர்ந்த சிறுவனுக்கு 17 வயதுதான் ஆகிறது.. அதே பகுதியை சேர்ந்தவர் 22 வயது பெண்ணுக்கு சிறுவன் மீது விருப்பம் இருந்துள்ளது..

இந்த பெண், ஆம்பூர் அருகே ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. 17 வயது சிறுவன் இந்த பெண்ணுக்கு ஒருவகையில் உறவினரும்கூட.. அதனால், ஒரே குடும்பம் என்பதால், கடந்த ஒரு வருட காலமாகவே நெருக்கமாக பழகி வந்திருக்கிறார்.
சிறுவன் மீது காதல்: ஒருகட்டத்தில், சிறுவனை காதலிப்பதாக சொல்லி தன்னுடைய வலையிலும் இந்த பெண் விழவைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த சிறுவனை அழைத்து கொண்டு மாயமாகிவிட்டார்.. சம்பவத்தன்று, சிறுவனின் வீட்டுக்கு சென்ற இளம்பெண், வெளியில் போவதாக சொல்லி அழைத்து சென்றிருக்கிறார்.. ஆனால், மறுபடியும் 2 பேருமே வீட்டுக்கு திரும்பவில்லை.
இதனால், 2 வீட்டு குடும்பத்தினரும் பதறிப்போய்விட்டார்கள்.. எனவே, ஆளுக்கு ஒருபக்கம் இருவரையும் தேட ஆரம்பித்தனர்.. அப்போதுதான், சிறுவனுக்கு ஆசைவார்த்தை கூறி இளம்பெண் அழைத்து சென்றதாகவும், குடியாத்தம் அடுத்த சிந்தகணவாய் முனீஸ்வரர் கோயிலில் சிறுவனை வைத்து தாலி கட்டிக் கொண்டதாகவும் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
தனலட்சுமி: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், குடியாத்தத்துக்கு விரைந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் அந்த பெண் திருமணம் முடித்த கையுடன், சிறுவனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.. இதனிடையே, இளம்பெண் சிறுவனை திருமணம் செய்த விவகாரம், பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமிக்கு தெரியவந்தது. அவர் உடனடியாக குடியாத்தம் மகளிர் போலீசுக்கு விஷயத்தை சொல்லி, இது தொடர்பாக புகாரையும் தந்தார்..
அதன்படி வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின்படி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனையும், இளம்பெண்ணையும் தேடி கொண்டிருக்கிறார்கள்.. 17 வயது சிறுவனை கடத்தி, அந்த பெண் எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை..
உறவுமுறை: திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.. ஆனால், கோயிலில் கல்யாணம் நடந்த விஷயம், அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது.. அதற்கு பிறகுதான், இந்த திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு இலவச உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார்கள். இப்போது போலீசார் உட்பட இரு வீட்டு குடும்பத்தினரும், இருவரையும் தேடி வருகிறார்கள்.
17 வயது சிறுவனை கடத்தி, இளம்பெண் திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துவருகிறது. இந்த இளம்பெண், அந்த சிறுவனுக்கு "சித்தி" முறையாம்..!!
கன்னியாகுமரி: சமீபத்தில் சோழிங்கநல்லூரில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. கன்னியாகுமரியை சேர்ந்த எப்சிபா என்ற 28 வயது பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்துள்ளார். கணவரை பிரிந்த இந்த பெண், தன்னுடன் படிக்கும் மாணவனுடன் நெருக்கமாக பழகியிருக்கிறார். தான் தங்கியிருந்த ரூமுக்கு மாணவனை அழைத்து செல்வாராம்.
ஒருநாள் அந்த மாணவன், டீச்சரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று நினைத்த டீச்சர், வேலையை ராஜினாமா செய்து விட்டு கோயம்புத்தூர் சென்றுவிட்டாராம். ஆனால், டீச்சரை விட்டு மாணவனால் இருக்க முடியாததால், கோயம்புத்தூருக்கே தேடி வந்துவிட்டார்.
டீச்சர் வாக்குமூலம்: தன்னை விட்டு பிரிந்து போனால், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மாணவன் மிரட்டினாராம். எனவே, வேறு வழியின்றி அவனுடனேயே தங்கியிருக்கிறார். இதனிடையே மகனை காணாமல், பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போதுதான், மேற்கண்ட வாக்குமூலத்தை போலீசாரிடம் டீச்சர் சொல்லியிருக்கிறார். எனினும், ஆசிரியையுடன் இருந்த மாணவன் மைனர் என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் டீச்சரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
போக்சோவில், பெண்களே கைதாவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், பிள்ளைகளை வழிநடத்தக்கூடிய ஒரு டீச்சரே கைதாகியிருப்பது, அதைவிட கேவலமாக இருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications