Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் அக்கப்போரு.. நர்சிங் மாணவி கையை டாக்டர் விடவே இல்லயாம்.. குடியாத்தம் அரசு மருத்துவமனையிலா?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பெண்களுக்கான பாதுகாப்பு என்பதே சமீப காலமாக குறைந்து வருகிறது.. பெண்கள் மீதான வன்முறைகளும் பெருகி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பாக அரசு டாக்டர்களே கைதாகி வருவது, அதற்கு மேல் அதிர்ச்சியை நமக்கு தந்து வருகிறது.

கடந்த வாரம் முழுவதுமே, திருச்சி பள்ளி விடுதி குறித்த பரபரப்பு அதிகரித்தவாறே இருந்தது.. மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது..

vellore gudiyatham government hospital doctor

அரசு உதவிபெறும் இந்த தொடக்கப்பள்ளிக்கு, மாணவிகளுக்கென தனியாக விடுதி உள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் இந்த ஹாஸ்டலிலேயே தங்கியிருந்து படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ள கிரேஸ் சகாயராணி என்பவரது 31 வயது மகன் சாம்சன்டேனியல், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

திருச்சி சம்பவம்: இவர், ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல அடிக்கடி வந்து சென்று, மாணவிகளுக்கு பாலியல் தொல்லையை தந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் மகன் என்பதால், மாணவிகள் பயந்துபோய் வெளியில் சொல்லாமல் இருந்த நிலையில், டாக்டரின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதற்கு பிறகுதான், குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணுக்கு புகார்கள் சென்றிருக்கின்றன.

போலீஸாரும் விசாரணையில் இறங்கி, டாக்டர் டேனியல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை உறுதி செய்தனர். இறுதியில் அவரை போக்சோ கைது செய்ததுடன், மகனது குற்றத்தை மறைத்ததாக கூறி பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் சகாய ராணியையும் போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தாயும், மகனும் ஒன்றாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

காட்பாடி சம்பவம்: அதற்குள் வேலூர் மாவட்டத்திலும் ஒரு டாக்டர் சிக்கியிருக்கிறார்.. காட்பாடி அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 19 வயதாகிறது.. குடியாத்தம் பகுதியிலுள்ள தனியார் நர்சிங் காலேஜில் இரண்டாம் வருடம் படித்து வருகிறார்.

இந்தக் கல்லூரியிலிருந்து, சில மாணவிகளை பயிற்சி பெறுவதற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அவ்வப்போது அனுப்பி வைப்பது வழக்கமாகும்.. அந்தவகையில், சம்பந்தப்பட்ட மாணவியும் குடியாத்தம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.,, இந்த மருத்துவமனையில் டாக்டர் பாபு என்பவர், எலும்பு முறிவு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

கையெழுத்து: கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மதியம் 1 மணியளவில், பயிற்சி வருகைக்கான கையெழுத்து பெறுவதற்காக, டாக்டர் பாபுவை அணுகியிருக்கிறார் சம்பந்தப்பட்ட காட்பாடி மாணவி. அப்போது, மாணவியின் கையை பிடித்து இழுத்து, ஆபாசமாகவும், வக்கிரமாகவும் நடந்து கொண்டாராம் டாக்டர் பாபு.

இதனால் பதறிப்போன மாணவி, அலறி கூச்சல் போட்டுள்ளார்.. அதற்குபிறகுதான், அந்த பெண்ணின் கையை விட்டிருக்கிறார்.. இதையடுத்து, மாணவி தரப்பிலிருந்து ஆகஸ்ட் 31-ம் தேதி குடியாத்தம் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. இதையடுத்து, மருத்துவர் பாபு மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், டாக்டர் பாபுவை கைது செய்யவில்லையாம்.

மாணவிகள்: இதனால் மாணவி தரப்பினர் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாக தெரிகிறது. பின்னர் இந்த விஷயத்தில் உடனடியாக மாதர் சங்கம் தலையிட்டுள்ளது.. டாக்டர் பாபு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு, ஜனநாயக மாதர் சங்கத்தினர் குடியாத்தம் பஸ் ஸ்டாண்டிலேயே கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று முன்தினம் நடத்தினார்கள்..

இப்படி நாலாபக்கமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, டாக்டர் பாபு கைதாகி உள்ளார்.. அதாவது 7 நாட்களுக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. அவரை கைது செய்ய போகும்போது, திருச்சி மேல கல்கண்டார்கோட்டை அருகே உள்ள தன்னுடைய சொந்தக்காரர் வீட்டில் பதுங்கியிருந்தாராம்.. இப்போது வேலூர் ஜெயிலில் உள்ளார் டாக்டர் பாபு..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+