வேலூரில் கழுதையின் வாலில் சொட்டு சொட்டாய் அது என்ன? வித்தியாசமான வாய்ஸ்.. ஆடிப்போன பேர்ணாம்பட்டு
வேலூர்: மாந்திரீக காரணங்களுக்காகவும் கழுதைகளின் வால்கள் பயன்படுத்தப்படுகின்றன.. மாந்திரீகத்துக்காக மண்டை ஓடுகள் வைக்கப்படும் செயல்கள் ஆங்காங்கே நடக்கும் நிலையில், கழுதைகளின் வால்களும் சில நம்பிக்கைகக்காக எடுக்கப்படுகின்றன.. இதுகுறித்த சம்பவம் ஒன்று வேலூர் மாவட்டத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
அந்த காலத்தில் பல நம்பிக்கைகள் நம் மக்களிடம் இருந்துள்ளன.. அதில் முக்கியமானது, கழுதை வால் பற்றின தகவலாகும்.. கழுதை வால் பயன்படுத்தினால் வீட்டில் செல்வம், பாதுகாப்பு, அதிர்ஷ்டம் போன்றவை பெருகும் என்பார்கள்..

அதற்காக சில நேரங்களில் விழாக்களில், வீட்டில் மந்திரப் பயிற்சிகளில், கழுதை வாலை எடுத்து சில செயல்கள் செய்துவிட்டனர்.
கழுதைகளின் வால்
சிலர் அதை பூஜை இடங்களில் வைத்து ஒளியாக எரிக்க செய்கின்றனர்.. சிலர் வீட்டின் கதவுகளுக்கு பக்கத்தில் வைப்பார்கள்.. இப்படி வைப்பதால் தீய சக்திகளை அது தடுத்திவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே மக்களிடம் இருந்தது. இப்போதும் இந்த நம்பிக்கை சிலரிடம் உள்ளது.. எனவே, கழுதைகளின் வால்களுக்கு டிமாண்டும் இன்றும் உள்ளது..
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நடந்துள்ள சம்பவம் அங்குள்ள பொதுமக்களுக்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பேரணாம்பட்டு நகரப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வாழ்கிறார்கள். இவர்கள் தினமும் பணி செய்வதற்காக, மேலும் வருமானம் ஈட்டுவதற்காக பல கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள்..
பேர்ணாம்பட்டு கழுதை
கோவிந்தராஜ், சரவணன், ராஜா, சிவா போன்றவர்கள் இந்த தொழிலைதான் முக்கியமாக நம்பி உள்ளனர்.. இவர்கள் கடந்த சில வருடங்களாகவே 10க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து, மேய்ச்சலுக்கு வெளியே விடுவதை வழக்கமாக செய்து வருகின்றனர்.
அப்படித்தான் சம்பவத்தன்றும் சில கழுதைகளை மேய்ச்சலுக்கு வெளியே விட்டிருந்தனர்.. சாயங்காலம் நேரத்தில் வழக்கமாக அவை வீடு திரும்பியிருந்தன.. ஆனால், அந்த கழுதைகளில், 3 கழுதைகளின் வால்கள் வெட்டப்பட்டு, ரத்தம் சொட்டும் நிலையில் காணப்பட்டன.
கழுதைகளின் வால்கள்
வெட்டப்பட்ட வால்களால் கழுதைகள் வலியால் கதறின.. கழுதைகளின் குரல்களே வித்தியாசமாகவும், பரிதாபமாகவும் காணப்பட்டது.. இதை பார்த்து பதறிப்போன சலவை தொழிலாளர்கள் உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. டாக்டர்கள் ரத்த காயங்களுடன் காணப்பட்ட அந்த கழுதைகளை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி, சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கினார்கள்..
உடனே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருந்துகள், கட்டிகள் மற்றும் தேவையான மருத்துவ உதவியை உடனே வழங்கினார்கள்.. மறுநாள் காலை, கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து, பாதிக்கப்பட்ட கழுதைகளுக்கு முழுமையான சிகிச்சை செய்தனர்.
வேலூர் கழுதை சத்தம்
இதுகுறித்து சலவை தொழிலாளர்கள் சொல்லும்போது, "கழுதைகளின் வால்களில் உள்ள சில முடிகள், மக்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நம்பிக்கையுடன் சிலர் தாயத்து செய்து அணிந்து கொள்கிறார்கள்.. மேலும், மாந்திரீகக் காரணங்களுக்காகவும் கழுதைகளின் வால்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு முன்பு, இந்த பகுதியில் வீதிகளில் மண்டை ஓடுகள் வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இப்போது மாந்திரீக கும்பல் காரணமாக, கழுதைகளின் வால்களை வெட்டி கொண்டு சென்றுள்ளனர்" என்றனர்..
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வனவிலங்கு நல அலுவலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களிடம் புகாரளித்து, சம்பவத்தை விசாரித்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications