என்னா மூளை.. மதுவை லுங்கியில் வடிகட்டி குடித்த குடிக்காரர்.. பாட்டில் உடைந்ததால் புதிய டெக்னிக்
வேலூர்: வேலூரில் கீழே விழுந்த மதுபாட்டிலை லாவகமாக எடுத்து அந்த மதுவை லுங்கியில் வடிகட்டிய குடிக்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருந்தாலு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மாநில அரசுகளுக்கு ஒரு சில தளர்வுகளை செய்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் 45 நாட்கள் கழித்து கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
அப்போது சில இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சிலர் மதுவாங்கியதாகவும் கொரோனா பரவும் அச்சம் இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீடு
இதையடுத்து மதுக்கடைகளை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதால் கடந்த 9ஆம் தேதி முதல் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடைகளில் விற்பனை
அப்போது மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 7 நாட்களுக்கு 7 வண்ணங்கள் கொடுக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்பட்டது.

வேலூரில் மதுவிற்பனை
இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து மீண்டும் கடை திறந்ததால் குடிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வண்ணம் என்பதால் இனி அடுத்த மது பாட்டில் கிடைக்க 6 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அடித்து பிடித்து வேலூரில் மதுவாங்கினார் ஒரு மதுப்பிரியர்.

அதிர்ச்சி
அப்போது மது வாங்கிய குஷியில் வந்த போது பாட்டில் கீழே விழுந்து உடைந்துவிட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழியானது. இதனால் சற்று தளராத அந்த நபர் தனது லுங்கியின் மூலம் அந்த உடைந்த பாட்டிலில் இருந்த மதுவை லாவகமாக வடிகட்டி குடித்தார். இதை பார்த்த மற்ற குடிக்கார்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video

கவலைப்படாத நபர்
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. லுங்கியில் வடிகட்டினாலும் கண்ணாடி துகள் தொண்டையினுள் சிக்கிவிட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி கவலைப்படாத அந்த நபர் இவ்வாறு செய்தது காண்போரை உறைய வைத்தது.
-
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications