காங்கிரஸ் எல்லாம் செத்துப் போன கட்சி.. எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வரவே வராது! துரைமுருகன் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது அது செத்துப்போன கட்சி அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஜென்மத்திலும் அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் எனவும், புதிதாக இரண்டு ரசிகர்கள் அரசியல் நோக்கில் செயல்படும் நிலையில், எல்லோரும் எம்ஜிஆர் விஜய் போல் ஆகிவிட முடியாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," பருவமழை தொடர்பாக எவ்வளவு பாதுகாப்பு செய்திருந்தாலும் கட்டுக்கடங்காத மழை வந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

Durai Murugan

ஆனால் அதனை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிர்வாகத்தை செய்ய வேண்டும். அதுதான் முறை. இந்த ஆட்சியில் அனைத்துமே மறைமுகமாக உள்ளது .எதுவுமே வெளிப்படை தன்மையோடு இல்லை. பருவமழை காரணமாக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்பதை அரசு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்.

துரைமுருகன்

மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கே அது குறித்து தெரியவில்லை. அதை விட்டுவிட்டு வண்டியில் சென்று ஆய்வு செய்வது, மரத்தை வெட்டுவது நிரந்தரமல்ல. எல்லாவற்றிலும் வெளிப்படை தன்மை வேண்டும் ஆனால் தற்போது இருப்பவர்கள் எந்த விஷயத்திலுமே வெளிப்படைத்தன்மையே கிடையாது. உதாரணமாக மின்சாரம் வாங்குவதிலும் வெளிப்படை தன்மை இல்லை.

மின்சார உற்பத்தி

நம்மிடம் போதிய அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி இருந்தும் ஏன் வெளியில் இருந்து வாங்குகிறோம் என இவர்கள் கூறுவதில்லை. எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை சொல்ல மறுக்கும் இவர்கள் எவ்வளவு வாங்குகிறோம் என்பதை மட்டும் சொல்கிறார்கள். அப்போதைக்கு எதையோ சொல்லி விட்டு செல்கிறார்கள். ஒரு ஒளிவு மறைவு இல்லாத அரசாங்கம் இருக்க வேண்டும், இது ஒரு மர்மமான அரசாங்கமாக உள்ளது.

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு கொஞ்சம் கூட கிடையாது. காரணம் போலீசாரிடம் சரியான அணுகுமுறை உள்ளதா என தெரியவில்லை. ஆளும் கட்சியினர் தான் அதிக போதைப்பொருள் வைத்திருப்பதாக பத்திரிகைகளில் பார்க்கிறோம். இந்த செய்திகளுக்கு எல்லாம் ஆளும் கட்சி விளக்கம் கொடுக்க வேண்டும். ஆனால் அதையும் கொடுப்பதில்லை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதையும் தெரிவிப்பதில்லை. ஆளும் கட்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயம் விட்டு போய்விட்டது.

சென்னை வெள்ளம்

நாம் தான் ஆளும் கட்சி நாம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதனுடைய விளைவு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது அதைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை. புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தான் சென்னையில் மழை வெள்ளம் விரைவாக வடிகிறது, அதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கையே காரணம் என அமைச்சர்கள் கூறினார்கள்.

டெண்டர் ரத்து

இவர்கள் ஒரு மண்வெட்டி மண்ணை கூட எடுக்கவில்லை. இன்றைக்கு சென்னையில் ஓரளவுக்கு வெள்ளம் வடிந்துள்ளது என்றால் அது நாங்கள் செய்து விட்டுப் போன பணிகளால் தான். இவர்களை தைரியமாக சொல்ல சொல்லுங்கள். இத்தனை கால்வாய்களை கட்டியுள்ளோம், இவ்வளவு தூரம் தூர்வாரி உள்ளோம் என.. எதற்கெடுத்தாலும் டெண்டரை கேன்சல் செய்கிறார்கள், டெண்டர் வைத்த பணிகள் நடக்கிறதா இல்லையா என்பதை பார்த்து ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் விஜய்

அதை விட்டுவிட்டு உடனே டெண்டர் ரத்து என்பது இவர்கள் டெண்டர் விட்டு பணம் வாங்க நடவடிக்கை எடுக்கிறார்கள். இவர்களால் புதிதாக ஒரு வேலையை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதில் டெண்டர் வைக்க முடியவில்லை. முதல்வர் சொல்கிறார் நான் அரசு பணத்தை தொட மாட்டேன் தொட்டவர்களையும் விடமாட்டேன் என்கிறார். அது சரி அரசின் பணத்தை யாராலும் தொட முடியாது.

காங்கிரஸ்

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் உள்நுழைய காரணம் திமுக தான் என தவெகவும், காங்கிரஸிம் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது. பாவம் அது செத்துப் போன கட்சி. அதைப் பற்றி என் பேசுகிறீர்கள். எஸ்ஐஆர்-ஐ ஆரம்பத்திலிருந்து எதிர்த்தது நாங்கள்தான். அன்றைக்கு எல்லாம் இவர்கள் எதிர்க்கவும் இல்லை ஒன்றும் இல்லை. வேண்டுமானால் பந்தயம் கட்டச் சொல்லுங்கள் அதை அறிமுகப்படுத்தியதில் இருந்து எதிர்த்து வந்தவர்கள் நாங்கள். இப்ப ஏதோ வெளிநடப்பு செய்வது போல் செய்கிறார்கள். காங்கிரஸ் எல்லாம் நமத்து போன சமாச்சாரம், அந்த கட்சியை பேசாமல் இருப்பதே நல்லது இந்த ஜென்மத்தில் ஆட்சிக்கு வராது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+