வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு
வேலூர்: வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நவம்பர் 29ஆம் தேதி 4 மணி 17 நிமிடங்கள் 22 வினாடிகள் என்ற மணி நேரத்தில், 25 கிலோமீட்டர் ஆழத்திற்கு வேலூரில் இருந்து 59 கிலோமீட்டர் மேற்குப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இது 3.6 என்ற அளவுக்கு பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரிக்டர் அளவுகோலில் இந்த அளவுக்கு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் லேசான நிலநடுக்கம் என்று அறியப்படும். எனவே இதன் காரணமாக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
ஒரு சில இடங்களில் மக்கள் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழகத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும், இது போன்ற லேசான நில அதிர்வுகள் நடைபெறுவது இயல்புதான் என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications